வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 248

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 248

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். 
இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான்.  

அப்போது ற்ர் ந்ய்ர்ஜ் ஜ்ட்ண்ஸ்ரீட் ள்ண்க்ங் ர்ச் ற்ட்ங் க்ஷழ்ங்ஹக் ண்ள் க்ஷன்ற்ற்ங்ழ்ங்க் எனும் to know which side of the bread is buttered Gàm idiomatic expression பற்றி ஜூலி மன்னர் வீரபரகேசரி மற்றும் கணேஷிடம் விவாதிக்கும் சந்தர்ப்பத்தில்  யிட்டிஷ் மொழியில் உள்ள ஒரு வேடிக்கைக் கதையில் இருந்தே இந்த சொற்றொடர் ஆங்கிலத்துக்கு வந்திருக்கலாம் எனச் சொல்கிறது. அது என்னவெனப் பார்ப்போமா!  

வீரபரகேசரி: தெர்மோடைனமிக்ஸ் பற்றி குறிப்பிடுகிறார். அதன் அர்த்தமென்ன என கணேஷ் கேட்க அவர் விளக்குகிறார்.

ஜூலி: அதாவது மன்னா... போலந்தில் உள்ள அந்த செல்ம் எனும் ஊரில் தெருவில் விழுந்து கிடந்த ரொட்டியின் வெண்ணெய் தடவின பக்கம் கீழே இருக்காமல் மேலே இருக்க அந்த ஊர் மக்கள் இந்தப் புதிரை நினைத்துக் குழம்புகிறார்கள். அப்போது தான் wisemen of Chelm  என சொல்லப்படுகிற இந்த வேடிக்கையான ஞானிகள் அங்கே வந்தாங்க. அவர்களிடம் மக்கள் இந்தப் புதிரை முன்வைத்தனர். அவர்கள் அதற்கு ஓர் எளிய ஆனால் படு அபத்தமான பதிலைக் கூறினார்கள். அதற்கு மக்களெல்லாம் ஒன்றாகக்  கைதட்டி பாராட்டினார்கள். அது என்ன பதில் தெரியுமா? 

கணேஷும் வீரபரகேசரியும்: என்ன? 

ஜூலி: அந்த முட்டாள் ஞானிகள் சொன்னார்கள்: "வெண்ணெய் தடவப்பட்ட பக்கம் தான் ரொட்டி விழுந்திருக்க வேண்டும். அப்படித்தான் இங்கும் விழுந்திருக்கிறது. ஆனால் இங்கே ஏன் தவறாக அது விழுந்திருக்கிறது என்றால் வெண்ணெய்யை தடவியவனின் முட்டாள்தனம். அவன் தப்பான பக்கத்தில் வெண்ணெய்யைத் தடவி விட்டான்.' 

(வீரபரகேசரி இடிமுழக்கமென சிரிக்கிறார். அதைக் கண்டு கணேஷ் பயந்து போகிறான். புரொபஸர் மாரைப் பிடித்துக் கொள்கிறார். ஜூலி வாலை சுருட்டிக் கொள்கிறது.)

ஜூலி: இந்த கதை to know which side of the bread is buttered எனும் சொற்றொடருக்கு ஒரு வேடிக்கையான வரலாறு உள்ளதைக் காட்டுகிறது. இப்படி சாமர்த்தியமாய் ஜால்ரா போடும் கழுதைகள் புத்திசாலிகள் அல்ல; வேடிக்கையானவர்கள் என இது உணர்த்துகிறது.  

வீரபரகேசரி: அருமை! தன் அமைச்சர்களை நோக்கி)  மன்னராகிய எனது புகழை மேலும் வளர்ப்பதற்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? 

தலைமை அமைச்சர்: மன்னா உங்களுக்கு மக்கள் அளித்த பட்டப்பெயர் "எவரெஸ்ட் சிகரம் கொண்டான்'. இதை உலகுக்கே பறைசாற்றும் பொருட்டு எவரெஸ்டை விட உயரத்தில் உங்களுடைய ஒரு வெண்கலச் சிலையை அமைத்து நிறுவப் போகிறோம். விண்வெளியில் இருந்து பார்த்தால் பளிச்சென்று உங்கள் உருவம் தான் இனித் தெரியும். You shall stand tall, king.

கணேஷ்: சிலை நிறுவினால் அவரது உயரம் எப்படி அதிகமாகும்? 

ஜூலி: Stand tall என்றால் ஒருவர் தான் செய்த காரியத்துக்காகப் பெருமையாக உணர்வது. 

வீரபரகேசரி: என்ன உயரம்? 

தலைமை அமைச்சர்: 30,000 அடி உயரம் மன்னா. 

இளைய அமைச்சர்: அது போதாது, முப்பது லட்சம் அடி உயரத்தில் செய்வோம்.
தலைமை அமைச்சர்: எவரெஸ்ட் உயரமே 29, 029 ஆயிரம் அடிகள் தாம். லட்சம் அடிகள் உயரமெல்லாம் சாத்தியமே இல்லை.

இளைய அமைச்சர்: ஏன் முடியாது? முடியும்.

வீரபரகேசரி: You were the last one to join the ministry. ஆனால் என்னுடைய அமைச்சர்களிலேயே நீ தான் துடிப்பானவன். Are you the last among my ministers or did you join last as a minister? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? கணேஷுக்கு இக்கேள்விக்கு பதிலறிய நீ உதவு. சரியான பதிலை அவன் சொன்னா இனிமேல் நீ தான் எனக்கு நிதித்துறை அமைச்சர்.

இளைய அமைச்சர்: எனக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது மன்னா...
வீரபரகேசரி: எனக்கும் தான் தெரியாது. பொருளாதாரம் பற்றித் தெரியாதவர்கள் என்னுடைய திட்டங்களை கேள்வியின்றி நடைமுறைப்படுத்துவார்கள். எனக்கு நிதித்துறையை நிர்வகிக்க ஒரு முட்டாள் தான் வேண்டும். A fool with a plan is better than a genius without a plan. திட்டமிடாத மேதையை விட திட்டமிடும் முட்டாள் மேல்.

இளைய அமைச்சர்: சரி மன்னா! என் அதிர்ஷ்டம்!

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com