இணைய வெளியினிலே...

சாலைகளில் காத்திருந்தார்கள் மனிதர்கள்.மனிதர்களுக்காககாத்திருக்கின்றன சாலைகள்.
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....

சாலைகளில் காத்திருந்தார்கள் மனிதர்கள்.
மனிதர்களுக்காககாத்திருக்கின்றன சாலைகள்.

தங்கம் மூர்த்தி

வெட்டியா இருக்கறது மாதிரிஒரு கஷ்டம் வேறில்லை...
ஒரு நாளுக்கேமூச்சு முட்டுது.

சுதா ஆறுமுகம்

பூனைகள் வாழும்வீட்டில்தான்எலிகள் குடித்தனம்நடத்திக்குட்டி போடுகின்றன.

பட்டுக்கோட்டை ராஜா

பூட்டிய கோயில் வாசலில்ஒரு பெண் ஏற்றிக்கொண்டிருந்தாள்...
நம்பிக்கையின்அகல் விளக்கை!

நேசமிகு ராஜகுமாரன்

சுட்டுரையிலிருந்து...


சொந்த வீட்டில் இருந்தபடி...
சோபாவில் கால் மீது கால்போட்டபடி
நொறுக்குத் தீனி சாப்பிட்ட படி
டிவி பார்த்தபடி
சும்மா நேரத்தை வீணடித்தபடி
இந்த உலகத்தையே காப்பாற்றும்
ஓர் அரிய வாய்ப்பு
நமக்குக் கிடைத்திருக்கிறது...
வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

ராஜலக்ஷ்மி

ஒரு பிணி
ஒரு சாவு
எல்லாருக்கும் வரும்
எப்படியும் வரும்
இதனால் மட்டுமே எனில்
இறந்து போவது,
நிச்சயமாக
நம்பிக்கை மட்டுமே!

வேகவதி

விலங்கென்று நினைத்தால் விலங்கு
கவசம் என்று நினைத்தால் கவசம்
கவசமாகப் பாவித்து...
தனித்திருங்கள்.

பனித்துளி

தனக்கு நிகழும் வரை...
அனைத்தும் வேடிக்கைதான்.

சுகன்யா

வெளிச்சம் தருவதுஎன்னமோவிளக்கின் வேலை தான்...
ஆனால் அதன் தேவையின் இடத்தைத்தீர்மானிக்கும் முழு உரிமையும்
நம்மிடம் மட்டுமே உள்ளது.

பிரியமானவள்


வலைதளத்திலிருந்து...


கிணற்றில் நீர் இறைத்து குளிப்பது என்பது தனி இன்பம் தான். அது ஒரு கனாக்காலம் மாதிரி ஆகிவிட்டது. அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு கிணறு என்பது சாதாரணம்.
துண்டை கட்டிக்கொண்டு, சத்தமாக ஒரு பாட்டையும் பாடிக்கொண்டு, இறைத்து இறைத்து தலையில் "ஜோ'வென்று கொட்டிக்கொண்டு குளிப்பது மிக மிக ஆனந்தமான கணங்கள். சில சமயம் பறவைகள் கூட்டமாக தண்ணீரில் கும்மாளமிடுமே அது மாதிரி. ஒரு பத்து வாளி முடிந்த பின் லைஃபாயோ இல்லை காதிகிராம் குடீர் சோப்போ (என் அண்ணன் சொல்லுவான் குடீர் சோப், தேயோ தேய் என்று தேய்த்தால் நன்றாக நுரை வரும், உங்கள் வாயில் என) போட்ட பின் மறுபடி ஒரு பத்து வாளி. குளிச்சா இப்படில்ல குளிக்கணும். இப்ப முடியுதா என்ன?
நான் விளையாடிவிட்டு ஒரு மூன்று மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து குளிக்கச் செல்வேன். அப்போது பாட்டி, ""வெக்கை அதிகமா இருக்குடா... ஒரு ரெண்டு வாளி ஜில்லுன்னு இறைச்சு
ஊத்து''ன்னு சொல்லுவாங்க. சரி வான்னு ரெண்டு என்ன, இந்தா இன்னும் ஒரு வாளி, இன்னும் ஒரு வாளின்னு இறைச்சு ஊத்திக்கிட்டே இருப்பேன். மிக மிக சந்தோஷமானது அது.
1982- இல் மாடக்குளம் கண்மாய் உடைந்து வந்த வெள்ளத்தில் என் வீட்டில் இருந்த கிணற்றில் சிமிண்ட் உறைகள் தாறுமாறாகச் சரிந்துவிட்டது. அதை அப்படியே மூடி விட்டு பக்கத்தில் புதிதாக இன்னுமொரு கிணறு வெட்டினார்கள். ஒரு வருடத்திலேயே தண்ணீர் மட்டம், நான் கிணற்று உள்ளேயே இறங்கி கப்பு வைத்து வாளியில் தண்ணீர் ரொப்பி இறைக்குமளவுக்கு கீழே போய்விட்டது அதனால் இன்னும் ஆழமாகத் தோண்ட வேண்டி வந்தது. பிறகு அதுவும் கீழே போனதால், ஒரு நல்ல முகூர்த்த நாளில், நள்ளிரவில் கம்ப்ரசர் வைத்து 150 அடி ஆழத்துக்கு ஆழ்துளை போட்டு, மோட்டார் போட்டு ஸ்ட்ராவில் இளநீர் உறிஞ்சுவது போல சுலபமாக 5 நிமிடத்தில் 1000 வாளி ரொப்பிவிடலாம் என்றாகிப் போனது. ஆக இப்போது கிணறும் இல்லை, பாட்டியும் இல்லை.
http://mounam.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com