மேடைப் பேச்சு... விடா முயற்சி!

எந்தவொரு செயலிலும் வெற்றி பெற அடிப்படையாக அமைவது தொடர் முயற்சி என்பது எல்லாரும் அறிந்ததுதான்.
மேடைப் பேச்சு... விடா முயற்சி!

எந்தவொரு செயலிலும் வெற்றி பெற அடிப்படையாக அமைவது தொடர் முயற்சி என்பது எல்லாரும் அறிந்ததுதான். ஒரு செயலை முயற்சியுடன் செய்யும்போது அந்தச் செயல் வெற்றிக்குரியதாக மாறுகிறது. ஒருவேளை அந்தச் செயல் வெற்றியைத் தராவிட்டாலும் மீண்டும் முயற்சி செய்தால் அது வெற்றியைத் தருகிறது. இதேபோலத்தான்,
"மேடையில் பேச வேண்டும்' என்ற ஆர்வத்தோடு மேடைக்கு வருபவர்கள் முதல் மேடையிலேயே வெற்றிப் பேச்சாளராக மாற இயலாது. அதற்கு முறையான முயற்சியும், சரியான பயிற்சியும் கண்டிப்பாகத் தேவை.
மேடை பயத்தால், தான் சொல்ல வந்த கருத்தை மறந்து கூட்டத்தினரிடையே கேலிப் பொருளாக மாறியவர்களும் உண்டு. மேடை ஏறியதும் "நான் பேசுவதைப் பற்றி அவர் என்ன நினைப்பாரோ? இவர் என்ன சொல்வாரோ? என்று குழம்பித் தவிப்பவர்கள்', "வலைக்கு முன்னால் கல்லைப் போட்டு மீன் பிடிப்பதில் தோல்வியடைந்தவரைப் போல, " மேடைப் பேச்சில் தோல்வியைச் சந்திக்கிறார்கள். மனதில் எழும் வீணான பயம் சிலரை மேடையில் கண்டபடி உளற வைத்துவிடுகிறது.
மேடைக்குச் செல்லும் முன்பே பயத்தோடு இருப்பவர்களால் கேட்பவர்களை உற்சாகப்படுத்த முடியாது. எனவே, மேடையில் பேசும் கருத்துகளை முன் கூட்டியே திட்டமிட்டு, அதனைச் சிறந்த பயிற்சிகள் மூலம் வெளிப்படுத்த பழகிக் கொள்வது நல்லது.
மேடையில் பேசும் திறமை ஒருவருக்கு இயற்கையாக அமைந்துவிடாது. தொடர்முயற்சியுடன் கூடிய உழைப்பால் மட்டுமே பேசும் திறமையை வளர்க்க இயலும்'' என்பது வெளிநாட்டு அறிஞரின்
கருத்தாகும்.
மேடை ஏறும்போதே மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நடுக்கம் இல்லாமல் மகிழ்ச்சியோடு மனம் இருக்கும்போதுதான் வார்த்தைகளைத் தெளிவாக வெளிக் கொணர இயலும். முதன்முதலில் மேடையில் பேச ஆரம்பிப்பவர்களுக்கு பயம் அதிகமாக இருக்கும்.
ஆரம்பத்தில் மேடை ஏறும்போது பயமாக இருந்தாலும், தொடர்ந்து பேசிப் பழகுவதன் மூலம்தான் விடாமுயற்சி அவர்களுக்கு வெற்றியைத் தரும்.
நெல்லை கவிநேசன் எழதிய "வாருங்கள் மேடையில் பேசலாம்' என்ற நூலிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com