வேலைவாய்ப்புச் செயலி!

வேலைவாய்ப்புச் செயலி!

உழைத்து வாழ வேண்டும் என்ற மந்திரச் சொல்தான் உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் உழைப்பை நிறுத்திவிட்டால் வாழ்க்கைச் சுழற்சியே நின்றுபோய்விடும்.


உழைத்து வாழ வேண்டும் என்ற மந்திரச் சொல்தான் உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் உழைப்பை நிறுத்திவிட்டால் வாழ்க்கைச் சுழற்சியே நின்றுபோய்விடும். தற்போது கரோனா மனிதர்களின் வாழ்க்கைச் சுழற்சியை நிறுத்தும் பணியில் இரவுபகலாக மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் போடப்பட்ட பொது முடக்கத்தால் கோடிக்கணக்கான பணியாளர்கள் வேலை இழந்து நெருக்கடிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக அடிப்படைப் பணியைப் பெற கூகுள் நிறுவனம் இந்தியாவுக்காக "கோர்மோ" என்ற வேலைவாய்ப்புச் செயலியை உருவாக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கும் கூகுள் நிறுவனம் 2017-இல் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தேடுதலுக்காக தனி தேடுதல் தளத்தை உருவாக்கியது. 2018-இல் வங்கதேசத்தில் முதலில் "கோர்மோ" செயலியை கூகுள் நிறுவனம் தொடங்கியது. பின்னர் இந்தோனேசியாவிலும், தற்போது 2020-இல் இந்தியாவிலும் கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.

தொடங்கிய சில நாள்களிலேயே ஜூமாட்டோ, டன்ஸோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களும் 20 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளுக்கு ஆள்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் சென்று "கோர்மோ' செயலியைப் பதிவிறக்கம் செய்து ஜி மெயில் உதவியுடன் உள்ளே நுழைந்தால் போதும். நாம் பணி செய்ய விரும்பும் துறையையோ அல்லது பொதுவான துறையையோ தேர்வு செய்து பணி வாய்ப்பைத் தேடலாம். பணிவாய்ப்பைத் தேடுவதற்கு மிகவும் எளிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலியில் உங்கள், படிப்புத்திறன், அனுபவம் ஆகியவற்றைப் பதிவிட்டால் போதும், உங்கள் தற்குறிப்பை தயார் செய்து விடுகிறது. மேலும், திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் ஏராளமான விடியோக்களும் இதில் உள்ளன.

வேலைவாய்ப்புகளுக்காக ஏராளமான இணையதளங்கள், செயலிகள் உள்ளபோதிலும் இன்றையச் சூழலில் கூகுள் நிறுவனத்தின் "கோர்மோ' செயலி உழைத்து வாழ்பவர்களுக்கு என்றும் கலங்கரைவிளக்கமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com