2020 - ஆம் ஆண்டின் சிறந்த செயலிகள்!

2020-ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளோம். பல நூற்றாண்டு வாழ் மக்களுக்கு கிடைத்திராத பல்வேறுவிதமான அனுபவங்களை நிகழாண்டில் கரோனா நமக்கு வழங்கியுள்ளது.
2020 - ஆம் ஆண்டின் சிறந்த செயலிகள்!

2020-ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளோம். பல நூற்றாண்டு வாழ் மக்களுக்கு கிடைத்திராத பல்வேறுவிதமான அனுபவங்களை நிகழாண்டில் கரோனா நமக்கு வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்களை மேலும் அடிமையாக்கி விட்டது ஸ்மார்ட்போன்கள். நமது வாழ்வின் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும் செயலிகள் இல்லையென்றால், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடே இருக்காது. அப்படிப்பட்ட செயலிகளில் நிகழாண்டில் சிறந்தவற்றை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிக பயன்பாடு, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் "தினம்தோறும் பயன்பாடு', "வேடிக்கை', "விளையாட்டு' என பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு நாட்டிற்குமான சிறந்த செயலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூங்குவதற்கு முன் கதைகளைக் கூறும் செயலியான "ஸ்லீப் ஸ்டோரிஸ் - வயஸô' செயலி நிகழாண்டில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. மனஅழுத்தம், மனச்சோர்வு, கவலை, இழப்பு என பல்வேறு வகையில் மனிதர்கள் சந்திக்கும் சோர்வைப் போக்கும் தன்னம்பிக்கைக் கதைகளைக் கூறி, நிம்மதியான தூக்கத்தை வர வைக்க இந்த செயலி உதவுகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

"பிரதிலிபி எஃப்எம்' என்ற செயலி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள புத்தகங்களை ஒலி வடிவில் இது வழங்குகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

டிக்டாக்கைப் போல் சிறு விடியோக்களை பிராந்திய மொழிகளில் உருவாக்க உதவும் "மோஜ்' மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. 50 லட்சத்துக்கு அதிமானோர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதேபோல் பத்துக்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் சிறு விடியோக்களை எடிட் செய்ய உதவும் "எம்எக்ஸ் டகா டக்' என்ற செயலி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தங்களுடைய முகத்தை வைத்து விடியோ, ஜிஃப், மீம் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படும் "ரீஃபேஸ்' செயலி ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

"ஃபுல் எச்டி' விடியோக்களை எடிட் செய்ய உதவும் "வீட்டா' செயலியும், வேலைவாய்ப்புத் தேடுபவர்களுக்கு உதவும் செயலியான "அப்னா-ஜாப் செர்ச்' செயலியும், கேள்விகளைக் கேட்டு விடையளிக்கும் "போல்கர்' செயலியும், தியானம் செய்வதற்கு உதவும் "மைன்ட் ஹவுஸ்' செயலியும், பொருள்களை விற்க உதவும் "மை ஸ்டோர்' செயலியும், கருத்துகளைப் பகிர உதவும் "கோ' செயலியும், வேர்ட், எக்ஸல், பவர்பாய்ண்ட் ஆகியவற்றை இணைத்து வழங்கும் "மைக்ரோ சாஃப்ட்' செயலியும், இணையவழி ஆலோசனைகளை வழங்கும் "ஜூம்' செயலியும் நிகழாண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 21 சிறந்த செயலிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com