நேரம்... வேலை...

காலையிலிருந்து எனது மடிக்கணினியில் உள்ள விசைப் பலகையைத் தட்டிக் கொண்டே இருக்கிறேன் என்பதா முக்கியம்? எவ்வளவு பக்கங்களை அதில் தட்டச்சு செய்திருக்கிறேன் என்பதல்லவா முக்கியம்.

காலையிலிருந்து எனது மடிக்கணினியில் உள்ள விசைப் பலகையைத் தட்டிக் கொண்டே இருக்கிறேன் என்பதா முக்கியம்? எவ்வளவு பக்கங்களை அதில் தட்டச்சு செய்திருக்கிறேன் என்பதல்லவா முக்கியம். காலையிலிருந்து சமையல் கட்டில் அம்மா உழைத்துக் கொண்டிருக்கிறாள். நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் தின்னச் சோறோ, ஊற்றிக் கொள்ள குழம்போ, வேறு எதுவுமோ செய்யப்படவே இல்லை. "இவ்வளவு நேரம் நீ என்னதான்மா செஞ்ச? ஒண்ணுமே செய்யக் காணுமே! சே!'' என்று பசியாக இருக்கும்போது கோபமாகக் கேட்பீர்கள்தானே!
 ஆகவே எவ்வளவு நேரம் வேலை செய்தோம் என்பதல்ல, எவ்வளவு வேலை செய்தோம் என்பதே கவனிக்கப்பட வேண்டியது.
 காலையிலிருந்து இரவு வரை அங்கும் இங்கும் ஓடி ஓடி உழைக்கிறோம் என்று சொல்லிக் கொள்வது சிலருக்குப் பெருமையான விசயமாக இருக்கும். ஆனால் அதனால் எந்தவொரு பயனும் இல்லையென்றால், அந்த உழைப்பு வீண் என்றே ஆகும்.
 "நான் எப்படியெல்லாம் வியர்வை சிந்தி உழைக்கிறேன். இங்கே உழைப்பிற்குத் தகுந்த மரியாதை கிடைப்பதில்லை என்று புலம்புவார்கள். இவர்களால் எப்போதும் ஆளுமைகளாக ஆக முடியாது. இவர்கள் உழைத்தார்கள் என்பது உண்மை. ஆனால் தேவையில்லாத இடத்தில் தேவையற்ற உழைப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது கூடுதல் உண்மை.
 ஆளுமைகள் எவ்வளவு நேரம் வேலை பார்த்தோம் என்று பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் எந்த அளவுக்கு அந்த வேலையைச் செய்து முடித்தோம் என்றே கவனிக்கிறார்கள்.
 பரமன் பச்சைமுத்து எழுதிய
 "அச்சம் தவிர்... ஆளுமை கொள்'
 என்ற நூலிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com