தேவைக்கேற்ற புதிய படிப்புகள்!

நம் நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் நல்ல பாடத்திட்டங்களுடன் திறன்மிக்க மாணவர்களை உருவாக்கி வருகின்றன. அவற்றில் பயிலும் மாணவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிக அதிக சம்பளத்துடன்
தேவைக்கேற்ற புதிய படிப்புகள்!

நம் நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் நல்ல பாடத்திட்டங்களுடன் திறன்மிக்க மாணவர்களை உருவாக்கி வருகின்றன. அவற்றில் பயிலும் மாணவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிக அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
இன்றைய நிலையில், செயற்கை நுண்ணறிவு துறையில் வேலைவாய்ப்பு ஆண்டு வளர்ச்சி 74 சதவீதத்துடன் முதலிடத்திலும், ரோபாட்டிக்ஸ் பொறியாளர் - 40, Data Scientist - 37, Full Stack Engineer - 35, Site Reliability Engineer, Customer Success Specialist, Sales Development Representative - 34, Data Engineer - 33, Behavioral Health 
Technician - 32, Cyber security Specialist - 30  சதவீதம் என அடுத்தடுத்த நிலையிலும் உள்ளன.
இந்த நிலையில், நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம், மொஹாலி மாவட்டம், லாண்ட்ரானில் உள்ள சண்டீகர் குழும கல்லூரிகளில் 10 புதிய ஆராய்ச்சி அடிப்படையிலான மற்றும் பிற தொழில்முறையிலான படிப்புகள் நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ளன.
கல்வித்துறைக்கும், தொழில் துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், நவீன தொழில்நுட்பங்களை தங்கள் குழுமக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவதற்கும், தற்போதைய சந்தை தேவைக்கேற்ப மாணவர்களை உருவாக்குவதற்கும் இந்த புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐ.கே. குஜ்ரால் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற இந்த கல்லூரியில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு அனுமதியுடன், B.Sc  Artificial Intelligence & Machine Learning, B.Sc Microbiology, BBA Sales, Marketing, Advertising, Public Relations Management ஆகிய படிப்புகளும், இந்திய மருந்து கவுன்சில் அனுமதியுடன் Pharm. D (Post Baccalaureate), M Pharma in Pharmacy Practice,  M Pharma in Regulatory Affairs ஆகிய படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. 
இதுகுறித்து சண்டீகர் குழும கல்லூரிகளின் லாண்ட்ரான் வளாக இயக்குநர் பேராசிரியர் பி.என். ஹிருஷிகேஷா கூறியது:
"அமெரிக்காவின் தனியார் இணைய கல்வி நிறுவனத்தின், வளர்ந்து வரும் வேலைகள்-2020 என்ற அறிக்கையின்படி, வளர்ந்து வரும் முதல் 15 வேலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் துறையில் பணியமர்த்தல் வளர்ச்சி கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 74% வளர்ந்துள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (ML) நிபுணர்களுக்கான இந்த தேவை அதிகரிப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் (பி.எஸ்சி) இளங்கலை படிப்பை கொண்டுவர எங்களைத் தூண்டியது. 
அதேபோல, இளைஞர்களை மேம்பட்ட சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர திறன்களுடன் உருவாக்குவதே இந்த நேரத்தின் மற்றொரு தேவை. இதனால், தற்போது பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்காக, விற்பனை, சந்தைப்படுத்தல், விளம்பரம் மற்றும் மக்கள்தொடர்பு மேலாண்மை ஆகியவற்றில் 3 ஆண்டு பிபிஏ படிப்புகளும் எங்களது கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளன. 
மேலும், மருத்துவ ஆராய்ச்சி, தரக் கட்டுப்பாடு ஆகியவற்றில் நுண்ணுயிரியலாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இதையொட்டி, மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத மாணவர்களுக்கான நுண்ணுயிரியலில் அறிவியல் பட்டப்படிப்பை (பி.எஸ்சி) அறிமுகப்படுத்துகிறோம். அதோடு, எம்.பார்மசி (ஒழுங்குமுறை விவகாரங்கள்) என்ற மருந்தியல் நடைமுறை படிப்பு, இதில் பயில்வோரை ஒழுங்குமுறை விவகார ஆலோசகர், மருந்து பாதுகாப்பு நிபுணர், மருந்து ஆய்வாளர், மருத்துவ தகவல் கூட்டாளர் போன்றவர்களாக ஆக்குகிறது. எம்.பார்மசி (மருந்து பயிற்சி) மற்றும் ஃபார்ம். டி (போஸ்ட் பேக்கலரேட்) படிப்புகள் பேராசிரியராக அல்லது மருத்துவமனைகளில் Pharma Co - vigilance, ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் வாய்ப்பை அளிக்கின்றன.

தற்போது, உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழில்கள் மற்றும் களங்களில் டிஜிட்டல்மயமாக்கல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, BBA Digital marketing என்று இன்னும் சில படிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. இது 3 ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பாகும். இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் இணையம், மொபைல்கள், விளம்பரம் மற்றும் பிற டிஜிட்டல் மீடியா துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தயாரிப்புகள் அல்லது சேவைகளைச் சந்தைப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட நுட்பங்கள் இந்த படிப்புகளில் கற்றுத் தரப்படவுள்ளன.
எங்கள் குழும கல்லூரி மாணவர்கள் சுமார் 4000 பேர், நிகழாண்டு வரை 350-க்கும் மேற்பட்ட சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவற்றில், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 30.25 லட்சம் ஊதிய தொகுப்பில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்'' என்றார் அவர்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com