படிக்க வேண்டாம்...வாசிப்பதைக் கேளுங்கள்!

எந்த ஒரு சொல்லாக இருந்தாலும் அதற்கான விளக்கம் அளிக்கிறது கூகுள். கூகுள் தேடலில், இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. இணையதளங்களில் தகவல்கள் கடல்போல் பரந்து விரிந்துள்ளன.
படிக்க வேண்டாம்...வாசிப்பதைக் கேளுங்கள்!

எந்த ஒரு சொல்லாக இருந்தாலும் அதற்கான விளக்கம் அளிக்கிறது கூகுள். கூகுள் தேடலில், இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. இணையதளங்களில் தகவல்கள் கடல்போல் பரந்து விரிந்துள்ளன.
 நீண்ட தகவல்கள் அடங்கிய கட்டுரைகளைத் தொடர்ந்து இணையதளங்களில் கூர்ந்து வாசிப்பதற்கு சிரமிருந்தது.
 இந்தப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.
 "ஹே கூகுள், ரீட் இட்' என கட்டளையிட்டால் போதும் இளையதள பக்கத்தில் உள்ள தகவல்களை அப்படியே கூகுள் அசிஸ்டென்ட் ஒலி வடிவில் வாசிக்கும். ஹிந்தி உள்பட 44 மொழிகளில் உள்ள இணையதளப் பக்கங்களை மொழிபெயர்த்தும், அப்படியே வாசிக்கும் அளவுக்கு இந்த சேவை தயார் செய்யப்பட்டுள்ளது.
 எந்த வரியில் வாசிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, அந்த பக்கத்தின் வரி மட்டும் தானாக போல்டு செய்யப்பட்டு காண்பிக்கும் சேவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் வேகத்தை குறைக்கவும், கூட்டவும் செய்யலாம்.
 ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சில மாதங்களில் இந்த சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் தொழில்நுட்ப சாதனங்களின் சர்வதேச கண்காட்சியில் கூகுள் இதனை காட்சிப்படுத்தியுள்ளது. மேலும், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீட்டு உபயோகப் பொருள்களை (ஐஓடி) குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்கும் தொழில்நுட்பத்தையும் கூகுள் நிறுவனம் இந்தக் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள விளக்குகள், ஏசி, காபி இயந்திரம், பிரிட்ஜ் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்கவும், நிறுத்தவும் கட்டளையிடலாம்.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com