வாங்க இங்கிலீஷ் பேசலாம் 225 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 225 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன. ஊரடங்கு ஊத்தரவு பிரகடனம் பண்ணப்பட்டுள்ளதாய் தெரிய வருகிறது. அவர்கள் ஒரு போக்குவரத்துக் காவலரிடம் உதவி பெற்று அவர்களின் வாகனத்தில் புரொபஸரின் நண்பர் வீட்டுக்குப் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் கனிவான அந்த பெண் காவலருக்கு புரொபஸர் நன்றி சொல்லும்போது முரட்டுத்தனமான காவலர்களை அந்தப் பெண் a few bad apples  என விளிக்கிறார். இதன் பொருளை கணேஷுக்கு ஜூலி விளக்குகிறது.
ஜூலி: A bad apple can spoil the bunch என ஒரு பழமொழி உண்டு. அதாவது ஓர் ஆப்பிள் குவியலில் ஒன்று அழுகி இருந்தாலும் அது மிச்ச பழங்களையும் பாதிக்கும். அதே போல ஒரு நிறுவனத்தில் அல்லது குழுவில் ஒருவர் தப்பானவராக இருந்தால் அது அந்த நிறுவனம் அல்லது குழுவின் பெயருக்கு மொத்தமாகக் களங்கம் கற்பிக்கும். 
பெண் காவலர்: என்ன சார் இது? நாய் பேசுது? 
புரொபஸர்: ஆமா, அது பேரு ஜூலி. அது ஓர் அதிசய நாய். எப்படியோ எங்கிட்ட வந்தது. நான் பேசுவதை எல்லாம் கேட்டு ஒரு நாள் பேச ஆரம்பிச்சதுதான், இப்பவும் நிறுத்தல. வாயாடி. 
பெண் காவலர்: அட... சூப்பர் சார். இதை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகவா? 
புரொபஸர்: வேணும்னா கூப்டு போங்க ... 
ஜூலி: இல்ல மாமா. வேண்டாம். என்னை நம்பித்தான் மீனு உங்களை தனியா விட்டிருக்காங்க. 
புரொபஸர்: அதுவும் சரிதான். 
பெண்காவலர்: ஹா... ஹா... யாரு மீனு? 
புரொபஸர்: என் மனைவி. கிட்டத்தட்ட முன்னாள் மனைவி. 
பெண்காவலர்: ஓ! (ஜூலியிடம்) சரி, A bad apple spoils the companion. இது யார் சொன்னது தெரியுமா? 
ஜூலி: தெரியுமே. பெஞ்சமின் பிராங்கிளின். The founding father of the United States.எழுத்தாளர், 
விஞ்ஞானி, தத்துவஞானி. 
பெண்காவலர்: அட... செம. 
புரொபஸர்: ஆனா ஒரு விசயம்தான் எனக்குக் கவலையா இருக்குது. நீங்க பெஞ்சமின் பிராங்கிளினோட இந்த மேற்கோளைச் சொன்னதும் நினைவுக்கு வந்தது. 
பெண்காவலர்: என்ன சார்? 
புரொபஸர்: பெஞ்சமின் பிராங்கிளின் இதைச் சொன்ன பதினெட்டாம் நூற்றாண்டில் அதனோட பொருள் வேற. அப்போ ஒரு சிலரால் ஒரு மக்கள் தொகையோட பெயரோ குணமோ கெட்டுப் போகக் கூடாதுன்னு மக்கள் நினைச்சாங்க. சிறிய தவறுகளைக் கூட சீரியஸா எடுத்துக்கிட்டாங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கூட ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக வரும்போது a bad apple spoils the bin என பத்திரிகைகளில் எழுதினார்கள். ஆனா இப்போ பாருங்க... ஒரு சிலர்தானே தவறு பண்ணினாங்க, அதுக்காக மற்றவர்கள் கெட்டவர்கள்னு நினைக்காதீங்க என்கிற பொருளில் இந்த பழமொழியைப் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்கள். சிலரோட மோசமான தவறுகளை எடுத்துக்காட்டினால் ஒரு சில ஆப்பிள்கள் அழுகி இருக்கும், ஆனால் மிச்ச ஆப்பிள்கள் எல்லாம் நல்ல நிலையில்தான் இருக்குங்கிற மாதிரி, அந்த ஒரு சிலரை வைத்து எங்களை மதிப்பிடாதீங்கன்னு பேசறாங்க. Just a few apples அல்லது a bad apple என இதை கடந்து போய்விடுகிறார்கள். It has become a reflexive defense whenever misconduct surfaces in the midst of some organization. நம்முடைய மதிப்பீடுகளோட மிகப்பெரிய வீழ்ச்சியின் விளைவாகத்தான் ஒரு பழமொழியோட பொருளே இங்கு இப்படி மாறிப் போயிருக்கு. 
பெண் காவலர்: ஓ... இவ்வளவு வரலாறு இதுக்குப் பின்னாடி இருக்குதா? நான் சும்மா கேஷுவலாதான் அதை சொன்னேன். போலீஸ்காரர்களோட நடைமுறை பற்றி panic பண்ற அளவுக்கு ஒண்ணுமில்லேன்னு சொல்ல நினைச்சேன். அவ்வளவுதான். 
கணேஷ்: சார் இப்போதான் நினைவு வந்துது. panic என்கிற வார்த்தைக்குப் பின்னாடி ஏதோ கதை இருக்குதுன்னு சொன்னீங்களே அது என்ன?
பெண் காவலர் ஆர்வமாக: சொல்லுங்க சார். கேட்போம்.
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com