இணைய வெளியினிலே...

மரத்தின் அனுபவச் சொல் சருகு;தரையெல்லாம் கவிதை.
இணைய வெளியினிலே...

முகநூலிலிருந்து...

மரத்தின் அனுபவச் சொல் சருகு;
தரையெல்லாம் கவிதை.

ஆரூர் தமிழ்நாடன்

வேகமாக ஓடி வரும் அலைகள்,
சோர்ந்து மடிந்து திரும்புகின்றன...
யாருமற்ற கடற்கரை.

பெருமாள் ஆச்சி

"எங்கேயும் நகரவே முடியாத வேலை' என்றுமுன்பெல்லாம் அலுத்துக் கொள்வோம்.
இப்ப...
எங்கேயும்நகர முடியாததே வேலை.

கவி வளநாடன்

பிரதி எடுத்துக் கொண்டதுநிழலாகத் தன்னை... மரம்.


வட்டூர்.
அ. கு ரமேஷ்

சுட்டுரையிலிருந்து...

வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தான்
இங்க வந்து பெண்ணைக் கட்டிட்டுப் போறாங்க.
வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்,
இங்க வந்து மாப்பிள்ளையைக் கட்டி
கூப்பிட்டுப் போக மாட்டாங்க.
அங்கேயே கல்யாணம் பண்ணிக்கிருவாங்க.

டீ

அன்பு இல்லாத ஒருவரின்
அழைப்புக்காக காத்திருப்பது
முட்டாள்தனம் என்பது முடிவில் தான் தெரியும்...
ஆனால் முடிவென்பது எப்போது என்று தெரிவதில்லை.

முகிலன்

வலைதளத்திலிருந்து...

கரோனாவும் நீதிநூல்களும்

அரசும், வலைத்தளங்களும், முக நூலும் இன்னபிறவும் கொரோனா குறித்து விரிவாக விளக்கியும் நம் மக்கள் முகக்கவசம் அணியாதும், சமூக இடைவெளிக் கடைப்பிடிக்காதும் கரோனாத் தொற்றை அசுர வேகத்தில் பரவச் செய்வது ஏன் ?
கரோனா குறித்து அறிந்தது எல்லாம், அறிந்ததாகக் கொள்ள மட்டுமே... பிறருக்குப் பகிர்ந்து கொள்ள மட்டுமே...
தாம் கடைபிடிப்பதற்கு அல்ல என்பதில் தெளிவாய் இருப்பதால்தானோ ?
ஒரு வகையில் இந்தத் தெளிதல் கூட... நீதி நூல்களும், நீதியை எளிதாய்ப் போதிக்க வந்த இதிகாசங்களும், புராணங்களும், காலம் காலமாய் இருந்தும் ஆயிரமாயிரமாய் இருந்தும், அநீதியும் , அக்கிரமங்களும், வன்
மமும், துரோகங்களும் புற்றீசல் போல் பல்கிப்பெருகுவது தெரிந்தும்... பாடாய்ப்படுத்துவது புரிந்தும்...
அவையெல்லாம் காலம் காலமாய் போற்றத் தக்கதாய்... பாதுகாக்கத் தக்கதாய்... வைத்திருக்க வேண்டியவையன்றி... கடைப்பிடிக்க வேண்டியவையல்ல என்பது நம் இரத்தத்தில் கலந்துவிட்டதால் தானோ ?
http://yaathoramani.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com