இணைய வெளியினிலே...

வாழ்க்கைஒரு கோமாளியைப் போல...என்னை எப்போதும்சிரிக்க வைத்துக் கொண்டேஇருக்கிறது.
இணைய வெளியினிலே...

முகநூலிலிருந்து...

வாழ்க்கைஒரு கோமாளியைப் போல...
என்னை எப்போதும்சிரிக்க வைத்துக் கொண்டேஇருக்கிறது.
சிரிப்பதை நிறுத்திவிட்டால்...
நான் அழத் தொடங்கி விடுவேன் என்பதால்
நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

நா.வே.அருள்

எனது சுதந்திரத்தை நீங்கள் வரையறுக்கிறீர்கள்...
வரையறைக்குள் இருக்கும் எதுவும் சுதந்திரமாகாதுஎன்பதை எப்போது அறிவீர்கள்?

வழிப்போக்கன்


கடலின்மேல் மட்டத்திற்கு வரும் போதெல்லாம்ஆகாயத்தின் உயரம்
பார்த்துப் பயந்து வேகமாய் ஆழத்தில் புதைகிறது மீன்.

டிகே கலாப்ரியா


வானத்திலேயே வட்டமடித்தாலும் தரையிலேயேஇருக்கிறது ஒரு பறவையின் இருப்பு.

பொன்.குமார்


சுட்டுரையிலிருந்து...

எல்லாருக்குள்ளும்உறங்கிக் கிடக்கிறது எதையும் கொல்லும்மிருகம்...
எல்லாருக்குள்ளும் அழுது கொண்டிருக்கிறது அனாதையான குழந்தை...
எல்லாருக்குள்ளும் எல்லாம் இருக்கிறது...
தேடுதலில் தொலைந்துவிடுகிறது வாழ்வு.

வேகவதி

அசலை விட, நகல்கள்தான் அதிகம்
நினைவில் கொள்ளப்படுகிறார்கள்.

மஞ்சப்பை


பசி மட்டும்இல்லையென்றால்...
மனிதன் ஆணவத்தால் என்றோஅழிந்திருப்பான்.

சைடு பிளீஸ்

"சொன்னா புரியாது'ன்னு சொல்லாமலே சொல்லுறது...
என்ன டிசைனோ?

மேல்மாடி


வலைதளத்திலிருந்து...


வேறு எந்த மக்கள் திரளையும் விட, சினிமாவை முழுமையாக வரித்துக் கொண்டிருக்கும் கூட்டமாகத் தமிழ்ச் சமுதாயத்தைச் சொல்லலாம். திரைப்படம் என்ற தொழில்நுட்பம் அதன் வளர்ச்சிப் போக்கில் கலையாகவும் மாற்றம் பெற்றது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நவீன கலையாக நிலைத்திருக்கிறது. எல்லாக் கலைகளும் நியாயமான அளவில் கேளிக்கையாகவும் பொழுதுபோக்குச் சாதனமாகவும் அமைந்தவைதாம். ஆனால் தமிழ்ச் சமூகத்தைப் பொருத்தமட்டில் சினிமா கேளிக்கையாகவும் பொழுதுபோக்குச் சாதனமாகவும் மட்டுமல்ல, ஏறத்தாழ மக்களின் பிரதி வாழ்க்கையாகவே பெருமளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது; நிலைபெற்றிருக்கிறது. பெருவாரியான மக்களின் சமூக இடையீட்டுக்கும் அந்தரங்க உணர்வுகளுக்கும் சினிமாவே ஆதாரமாக இருக்கிறது.

நடித்து வெளியான நாலு படங்களில் பிரபலாமாகும் நடிகர் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் விற்பன்னராகிறார்.

திரைப்பட உரையாடல்களும் பாடல்களும் அந்தரங்கப் பரிமாற்றத்துக்குரிய மொழியாக மாறுகின்றன.

சமூகப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் திரைப்படக் காட்சிகளின் வடிவில் கடைப்பிடிக்கப்படுகின்றன. திரைப்பிரபலங்களின் உடல் மொழியே தமது சரீர பாஷையாகக் கணிசமானவர்களால் பின்பற்றப்படுகின்றது.

இவற்றையெல்லாம் விடவும் சினிமா செல்வாக்கே தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தி ஆனது. தமிழ்ச் சமுதாயத்தின் பொதுக் கலையாக திரைப்படம் மாறியது.

http://vaalnilam.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com