அருகி வரும் தாவரங்கள்!

அழிந்துவரும் அருகிவரும் தாவரங்களின் வாழிடங்களைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்து அந்தத் தாவரங்களை அங்கேயே வளரச் செய்யலாம்.
அருகி வரும் தாவரங்கள்!

அழிந்துவரும் அருகிவரும் தாவரங்களின் வாழிடங்களைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்து அந்தத் தாவரங்களை அங்கேயே வளரச் செய்யலாம்.  அல்லது அத்தகைய தாவரங்கள் வளர்வதற்கான இயற்கைச் சூழல்களை வேறு இடங்களில் செயற்கையாக உருவாக்கி, அங்கே வளர்க்கலாம்.  (எ.கா:)  தேசியப் பூங்காக்கள், தாவர அடைக்கல வனங்கள், தாவரப் புகலிடங்கள். 

அழியும் நிலையில் உள்ள தாவரங்களைப் பாதுகாக்கும்  வகையில் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதும், நிதி ஒதுக்கீடு செய்வதும் தேவையான நடவடிக்கைகளாகும். 

அப்படியும் வளராமல் அழிந்தே போகும் நிலையில் உள்ள தாவரங்களின் மரபு வளங்களைச் சேகரித்து உயிரித் தொழில்நுட்ப முறையில் அந்தத் தாவரங்களுக்கு மறுபிறவி வரத்தை வழங்கலாம்.

வேர், தண்டு எதுவும் இல்லாமல் ஒரு தாவரத்தின் இலை மட்டுமே இருந்தால் போதும். அதில் இருந்து திசுக்களை எடுத்து, அத்தகைய தாவரங்களை மீண்டும் உருவாக்க முடியும். 

ஓர் இலையைக் கொண்டு ஓராயிரத்துக்கும் அதிகமான தாவரங்களை உருவாக்கி அந்தத் தாவரத்துக்கு மீள் வாழ்வு அளிக்க முடியும்.  

இதற்கான ஆராய்ச்சிகளுக்காக நம் அரசுகளும்  நம் பல்கலைக்கழகங்களும் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.

அழிந்துவரும் அருகிவரும் அரிய தாவரங்களை மீட்டுப் பாதுகாப்பதற்காக டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில்  தேசிய தாவர மரபுவள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழியும்நிலையில்  உள்ளஅரிய தாவரங்கள் பலவும் அந்த ஆராய்ச்சிக் கூடங்களில் 180 பாகை குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  புயல், பெருமழை, ஆழிப் பேரலை போன்ற இயற்கைப் பேரிடர்களால் தாவர இனங்கள் அழிந்தாலும், ஆராய்ச்சிக் கூடங்களில் டிஎம்எஸ்ஓ வேதிபொருளில்  வைத்துப் பாதுகாக்கப்படும் மரபு வளங்களிலிருந்து அந்தத் தாவர இனத்தை மீண்டும் உருவாக்க முடியும். இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த மூலிகைத் தாவரங்களையும் அழியாமல் பாதுகாக்கலாம். 

இதை வேறு வகையில் சொல்வதென்றால்... 

அரிய தாவரங்களின் மரபணுக்களை மரபணு வங்கியில் உறைநிலையில் சேமித்து வைக்கலாம்.   அப்படிப் பாதுகாக்கப்படும் மரபணுக்களிலிருந்து பன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தாவரங்களுக்கு உயிர் கொடுக்கலாம் என்ற நிலையில் இன்றைய அறிவியல் வளர்ந்துள்ளது. 

ச.கீதாதேவி எழுதிய "தாவரங்களே இல்லாமல் போய்விட்டால்' என்ற நூலில் இருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com