கையெழுத்து தட்டச்சு எழுத்தாக கணினியில் மாறும்!

2018 - ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் "லென்ஸ்' ஆப், மொழி பெயர்ப்பு மன்னன் என்றே கூறலாம். அதுவும், கூகுள் லென்ஸ் ஆப்பை ஆன் செய்து ஸ்மார்ட்போன் கேமராவைக் காட்டினால் போதும், நமக்குத் தெரியாத
கையெழுத்து தட்டச்சு எழுத்தாக கணினியில் மாறும்!


2018 - ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் "லென்ஸ்' ஆப், மொழி பெயர்ப்பு மன்னன் என்றே கூறலாம். அதுவும், கூகுள் லென்ஸ் ஆப்பை ஆன் செய்து ஸ்மார்ட்போன் கேமராவைக் காட்டினால் போதும், நமக்குத் தெரியாத மொழியில் உள்ள எழுத்துகள், தெரிந்த மொழிக்கு உடனடியாக மொழிப் பெயர்ப்பு செய்யும் மந்திரக் கோலாக அது உள்ளது. 

வெறும் எழுத்துகள் மட்டுமின்றி,  பிறர் பேசும் மொழியையும் நமக்குத் தெரிந்த மொழியில் உடனடியாக மாற்றவும் செய்கிறது. 

தற்போது மேலும் ஒரு புதிய அம்சமாக, கையால் எழுதப்பட்டதை "காப்பி' செய்து கணினியில் எழுத்து வடிவத்தில் "பேஸ்ட்' செய்வதை கூகுள் லென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. முன்பு இந்த வசதி ஸ்மார்ட் போன்களில் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. தற்போது, காப்பி செய்யப்பட்டதை கணினி அல்லது மடிக்கணினியில் உள்ள "வேர்ட்' பைலில் பேஸ்ட் செய்யலாம். இதை செய்வதற்கு ஸ்மார்ட்போனிலும், கணினியிலும் ஒரே கூகுள் அக்கவுண்ட்டை வைத்திருக்க வேண்டும். கூகுள் லென்ûஸயும், கணினியில் உள்ள கூகுள் குரோமையும் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கையால் எழுதப்பட்டதை கூகுள் லென்சில் காப்பி செய்து, "சேவ் டூ கம்ப்யூட்டர்' என்பதை கிளிக் செய்து, பின்னர் மடிக்கணினி, கணினி ஆகியவற்றில் உள்ள "வேர்ட்' பைலில் சென்று "பேஸ்ட்' செய்து கொள்ளலாம்.   சுமார் 50 சதவீதமாவது கையெழுத்து தெளிவாக இருந்தால்தான் காப்பி செய்ய இயலும். 

மேலும் புதிய அம்சமாக, ஒரு மொழியின் வார்த்தை அல்லது வாக்கியத்தை எப்படித் தெளிவாக உச்சரிக்க வேண்டும் என்பதையும் கூகுள் லென்ஸ் செய்கிறது. வார்த்தை அல்லது வாக்கியத்தைத் தேர்வு செய்தால்போதும், அதன் தெளிவான உச்சரிப்பை ஆடியோ வடிவில் கேட்கலாம். இந்த வசதி புதிதாக மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு பெரும் உதவியாக இருக்கும். 

100-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளடக்கிய கூகுள் லென்ஸ் புதிதாக சாதிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com