வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 243

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 243


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் விவாதிக்கும் போது therefore மற்றும் thereby எனும் இரு சொற்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வித்தியாசம் என்னவென அவன் மேலும் கேட்க ஜூலி விளக்குகிறது.

ஜூலி: ரொம்ப எளிமையாக சுருக்கமாக விளக்கப் பார்க்கிறேன். இதற்கு மேல் தொந்தரவு பண்ணாதே. 
கணேஷ்: சரி. 
ஜூலி:   There by means “by that means’ or “as a result of that’. அதாவது "இதன் விளைவாக' அல்லது "அதனால்'. உதாரணமாக, விராத் கோலி உடற்தகுதியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் விளைவாக அணியின் பிற வீரர்களின் உடற்தகுதியும் கடந்த சில ஆண்டு
களில் பெருமளவு மேம்பட்டு உள்ளது. Virat Kohli is much interested in fitness, thereby the fitness level of his team mates has tremendously improved in the past few years. இப்படி முதலில்  ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு விட்டு அடுத்து அதன் விளைவை சொல்வதற்கு ஒரு வினையூக்கியாக / adverb therebyஐ பயன்படுத்துவோம். மற்றொரு உதாரணம்.
Raja prepared for medical entrance exam for two straight years and was thereby able to get the top score. ராஜா தொடர்ந்து இரு வருடங்கள் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்தான்; அதனால் அவனால் முதன்மை மதிப்பெண்ணைப் பெற முடிந்தது. ராஜா படித்ததனால் தான் சாதித்தான் என வினையை மதிப்பூட்டுவதால் thereby இங்கு adverb ஆக செயல்புரிகிறது. இந்த வகையில் எண்ணற்ற வாக்கியங்களை நாம் உருவாக்கலாம்.
கணேஷ்: Julie spent much of her earlier days listening to the Professor, which sharpened her English language skills. இதை thereby பயன்படுத்தி Julie spent much of her earlier days listening to the Professor, thereby she was able to sharpen her English language skills என்றும் சொல்லலாம்.  
ஜூலி: அதே போல because -ஐ பயன்படுத்தவும் செய்யலாம். 
கணேஷ்: Because Julie spent much of her earlier days listening to the Professor, her English language skills were sharpened. 

ஜூலி: Because என்பது ஒரு வாக்கியத்தின் துவக்கத்தில் நடுவிலோ வரலாம். நீ சொன்ன வாக்கியத்தையே, Julie’s English language skills were sharpened because she spent much of her earlier days listening to the Professor  என்றும் சொல்லலாம். Because இன் இடத்தில் as கூட பயன்படுத்தி இதே வாக்கிய அமைப்பில் சொல்லலாம். Julie’s English language skills were sharpened as he spent much of her earlier days listening to the Professor. அல்லது திருப்பியும் சொல்லலாம்: As Julie spent much of her earlier days listening to the Professor, her English language skills were sharpened. Sharpened என்றால் மெருகேறியது என அர்த்தம். 
கணேஷ்: இதே போல since பயன்படுத்தலாமா? 
ஜூலி: தாராளமா. Since Julie spent much of her earlier days listening to the Professor, her English language skills were sharpened என்று சொல்லலாம். ஆனால் நீ இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்களிடம் பேசும் போது மட்டும் கவனமாக இருக்கணும். 
கணேஷ்: ஏன்?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com