இணைய வெளியினிலே...
By DIN | Published On : 29th September 2020 06:00 AM | Last Updated : 29th September 2020 06:00 AM | அ+அ அ- |

முக நூலிலிருந்து....
நீரற்ற ஆற்றின் படித்துறைகள்,
நள்ளிரவில்இசைக்கின்றன...
தனிமையின்சங்கீதங்களை.
நேசமிகு ராஜகுமாரன்
கோபத்தில்நாக்கு வேலை செய்யும்அளவுக்கு...
மூளை வேலைசெய்வதில்லை.
மாரியப்பன்
சிரிப்பதற்குக்கற்றுக் கொள்ளுங்கள்.
அழுவதற்குஉடனிருப்பவர்கள்கற்றுத் தந்துவிடுவார்கள்.
கோபால கிருஷ்ணன்
சுட்டுரையிலிருந்து...
மரமே கோவில்
மழையே தெய்வம்
சிகரங்களை அடைய...
சிறகுகளுக்காகக் காத்திராதே!
பாதங்களைப் பயன்படுத்து.செங்காந்தள்
எதுக்காக ஏங்கித் தவிச்சோமோஅது கிடைக்கலன்னு சந்தோசப்படும் நாள் வரும்!
யார் பிரிவுக்காக வருந்தி கதறியழுதோமோஅவங்க திரும்பி வந்தாலும்,
"வேண்டாம் போய்டு'னு சொல்ற நாள் வரும்!
காலங்கள் மட்டுமே மாறுவதில்லை;
நேற்றைய நானும் இன்றைய நானும் கூட ஒன்றில்லைதான்.
மாஸ்டர் பீஸ்
நீ விலகி நிற்கஏதேதோ காரணம் கூறுகிறாய்.
ஆனால்,அத்தனை காரணங்களைக் கடந்தும்பின் தொடர...
"நாளை நிச்சயமில்லை'
என்ற ஒற்றைக் காரணமேபோதுமானதாய் இருக்கிறது.
துளிர்
வலைதளத்திலிருந்து...
உள்ளுணர்விலிருந்து வாழ முடியும் என்பதே மறந்துபோய், குப்பையாய்ச் சிதறுண்டு கிடக்கும் கருத்துகளைப் பிடித்து அவற்றோடு ஒட்டிக் கொண்டு வாழ முயற்சிப்பதே நமது பிளவுக்குக் காரணம், நமது சக்தியற்ற நிலைக்குக் காரணம்.
சக்தி பொங்கிய நிலையில் மகிழ்ச்சியும் குதூகலமுமாய் குழந்தை காரணமின்றி கொண்டாட்டத்தில் இருப்பதைப் பாருங்கள். யாரைப் பார்த்தாலும் சிரிப்பு, கை தட்டல், ஓட்டம், இரைத்தல், எறிதல், குதித்தல், கொண்டாடல், மகிழ்தல், இதுதான் இயற்கை... கட்டாயத்தனமல்ல.
ஆற்றில் நீந்தி, மூழ்கி, விளையாடி ஆனந்தப்படுதலே குளித்தல். உடலைத் தண்ணீரில் சுத்தமாய்க் கழுவி துடைப்பது கட்டாயத்தனம். நாம் எப்படி ஒவ்வொரு செயலிலும் கட்டாயத்தனத்தின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்; பிச்சைக்காரனாய், பயந்தவனாய், பேராசைக்காரனாய் பிளவுபட்டு வாழ்கிறோம்; சக்தியற்று இருக்கிறோம் என்பதை உணருங்கள்.
வியாபாரம் செய்யும் சந்தைக்கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின், அதிகாரியின் அதிகார எல்லை கடந்து அன்பின் எல்லைக்குள் வந்தவுடன், நண்பனிடம், குழந்தையிடம், தாயிடம்,
பழகும்போது, தோட்டத்தில், கடலலையில், மழைச்சாரலில் இருக்கையில் முழுமையாய் இருக்க, உள்ளுணர்விலிருந்து வாழ, உணர்வாய் உணர முயலுங்கள்.
அழகை ரசியுங்கள். இசைக்குத் தலையாட்டுங்கள். உடலைக் கொண்டாடுங்கள். சிறிய செயல்களில் முதலில் முழுமையாயிருந்து பழகுங்கள். நடக்கையில் முழு உணர்வோடிருங்கள். உணர்வோடு மட்டுமாய் நடத்தலாய் இருங்கள். குளிக்கும்போது நீரின் குளிர்ச்சியை உணருங்கள். அந்த குளிர்ச்சியில் குளிருங்கள். இப்படி முழுமையாய் பிளவுபடாமல் வாழும் கணங்களை உங்கள் வாழ்வில் அதிகரிப்பதும் தினமும் ஒரு மணிநேரம்
தியானப் பயிற்சி செய்வதும் உதவக் கூடியது.
http://www.osho-tamil.com