வேலை வாய்ப்பை வழங்கும் மீன் வளத்துறை படிப்புகள்!

கடல் எவ்வளவு பெரியதோ... அதே அளவு பரந்த வேலைவாய்ப்பினை வழங்கும் துறையாக மீன்வளத்துறை உள்ளது.
வேலை வாய்ப்பை வழங்கும் மீன் வளத்துறை படிப்புகள்!


கடல் எவ்வளவு பெரியதோ... அதே அளவு பரந்த வேலைவாய்ப்பினை வழங்கும் துறையாக மீன்வளத்துறை உள்ளது.

மீன்வளத்துறை படிப்புகளைக் கற்பதன் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள முடியும். மேலும் சுய தொழில் செய்ய விரும்பும் மாணவர்களும் இத்துறையில் கற்று  தொழிலதிபராக உயர்வடைய முடியும். 

மீன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 2}ஆம் இடம் வகிக்கிறது என்பதால் மீன்வளத்துறை படிப்புகளைக் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு என்றுமே பிரச்னை இல்லை. மீன்வளத்துறை படிப்புகள் மூலம் மீன்வளத் துறையில் பல வேலைகளைப் பெற்ற முடியும் என்பதுடன் வங்கி, காப்பீட்டுத்துறை, கல்லூரி உள்ளிட்டவற்றிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. முதுநிலைப் படிப்புகள், பட்ட படிப்புகள், பட்டயப் படிப்புகள் என ஏராளமான படிப்புகள் கல்லூரிகளில் உள்ளன.  

மீன்வளப் படிப்புகளுக்கென்று ஒரு தனிப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் உள்ளது. அதன் கீழ் பொன்னேரி,  தூத்துக்குடி, நாகப்பட்டினம், தலைஞாயிறு, கன்னியாகுமரி, மாதவரம், வாணியஞ்சாவடி,சென்னை உள்ளிட்ட இடங்களில் 11 கல்லூரிகளில் மீன் வளம் சார்ந்த படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.மேலும், ராமநாதபுரம், மாயவரம், முட்டுக்காடு, ராயபுரம் ஆகிய இடங்களில் பாரா புரொபஷனல் தொழிற்கல்வி கூடங்களும் உள்ளன. இந்த பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.எஃப்.எஸ்சி (பேச்சுலர் ஆஃப் ஃபிஷரீஸ் சயின்ஸ்)

பி.டெக் (ஃபிஷரீஸ் என்ஜினியரிங்)
பி.டெக் (பயோடெக்னாலஜி)
பி.டெக் (ஃபுட்  டெக்னாலஜி) 
 பி.டெக் ( ஃபிஷரீஸ்  நாட்டிகல் டெக்னாலஜி)
பி.டெக் (எனர்ஜி அண்ட் என்விரான்மென்ட்டல் என்ஜினியரிங்)
பி.பி.ஏ. (ஃபிஷரீஸ் பிசினஸ் மேனேஜ்மெண்ட்)
பி.வொக். (ஆக்வாகல்சர்)
பி.வொக். (இன்டஸ்டிரியல் ஃபிஷ்  புராசெஸிங் டெக்னாலஜி)
பி.வொக். (இன்டஸ்டிரியல் ஃபிஷ்ஷிங் டெக்னாலஜி)
பி.வொக்.(ஆக்வாட்டிக் அனிமல் ஹெல்த் மேனேஜ்மெண்ட்)

போன்ற இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

அது போல்,

எம்.எஃப்.எஸ்சி (ஆக்வாகல்சர்)
எம்.எஃப்.எஸ்சி (ஆக்வாட்டிக் அனிமல் ஹெல்த்)
எம்.எஃப்.எஸ்சி (ஆக்வாட்டிக் என்விரான்மெண்ட் மேனேஜ்மெண்ட்)
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷ் புராசெஸிங் டெக்னாலஜி)
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷரீஸ் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி)
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷரீஸ் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்) 
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷ் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் அண்ட்  மேனேஜ்மெண்ட்)
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷ் நியூட்ரிஷன் அண்ட் ஃபீட் டெக்னாலஜி)
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷரீஸ் எக்ஸ்டென்ஷன்)
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷரீஸ் எகனாமிக்ஸ்)
எம்.எஃப்.எஸ்சி  (ஃபிஷ் பயோடெக்னாலஜி) 
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷ் ஜெனடிக்ஸ் அண்ட் பிரீடிங்)
எம்.டெக் (ஆக்வாகல்சர் என்ஜினியரிங்)
எம்.எஃப்.எஸ்சி (ஃபிஷ் பார்மகாலஜி அண்ட் டாக்ஸிகாலஜி)
எம்.டெக் (ஃபிஷ் புராசெஸ் என்ஜினியரிங்)
எம்.பி.ஏ. (ஃபிஷரீஸ் எண்டர்பிரைஸ் மேனேஜ்மெண்ட்) 
போன்ற முதுநிலைப் பட்டப் படிப்புகளும் இந்த கல்லூரிகளில் உள்ளன.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தஞ்சாவூர், மண்டபம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, குலவை, பூண்டி, தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 41 உறுப்பு தொழிற்கல்விக் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன.

பிளஸ்} டூவில் அறிவியலை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்கள் மீன்வளக் கல்லூரிகளில் சேர முடியும். மேலும் விவரங்களுக்கு www.tnjfu.ac.in   என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com