வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 307

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 307

ஊரடங்கு பிரகடனம்  செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

ஊரடங்கு பிரகடனம்  செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னர் தன் அமைச்சர்களை bug வைத்த பூச்சிகளைக் கொண்டு வேவு பார்க்கும்போது அந்தப்புரத்தில் இருந்து லலிதாங்கி கோபமாக வருகிறாள்.
லலிதாங்கி: மன்னாவீரபரகேசரி: என்ன லலிதா?

லலிதா: I am out of my mind.

கணேஷ்: என்னது அவங்க மனசுக்கு வெளியே வந்துட்டாங்களா? அப்படீன்னா அவங்க எப்படி இனிமே யோசிப்பாங்க?
ஜூலி: அடேய்
கணேஷ்: ஜூலி... என் மனம் இல்லாம என்னால் யோசிக்க முடியுமா?
ஜூலி: out of mind என்றால் out of my normal mind 
 
எனப் பொருள். அதாவது கடும் கோபத்தில், 
வருத்தத்தில், துக்கத்தில் கிட்டத்தட்ட பைத்தியமாகிற நிலை. She is out of her mind with grief. He is out of his mind with anger. இப்படி வாக்கியங்களில் இந்த மரபு
வழக்கைப் பயன்படுத்தலாம். 
கணேஷ்: அடடா... இந்த பேரழகிக்கு இப்படி ஒரு நிலையா? ஜூலி, ஏன் எப்போதும் அழகும் 
பைத்தியமும் சேர்ந்தே பயணிக்கிறது? 
ஜூலி: பேரழகு சிலநேரம் நம்மைப் பைத்தியமாக்கும். பார்க்கிறவர்களை மட்டுமல்ல, அந்த அழகை சுமக்
கிறவர்களையும் தான். ஏதோ பொன்னுலகில், 
கற்பனை உலகில் தாம் வசிப்பது போல உணர வைக்கும். 
இத்தகையோரை they are away with fairies என்று சொல்வார்கள். 
கணேஷ்: Fairies?
ஜூலி: தேவதைகள். தேவதை உலகம் என்று சொல்வார்களே அப்படியான ஒரு உலகில் நம்மை யாரோ தூக்கிக் கொண்டு போய் விட்டது போல ஒருவர் முழுக்க கற்பிதமான வாழ்க்கைக்குள் இருப்பது தான் to be away with the fairies. அதாவது to be in such a dreamy state that they are not totally in touch with reality and give the impression of being slightly mad.
கணேஷ்: புரியுது. 
வீரபரகேசரி: என்ன கோபம் உனக்கு? 
லலிதாங்கி: முதல் பிரச்னை, என்னை யாரோ கண்
காணிக்கிறார்கள். 
வீரபரகேசரி (தனக்குள்): ஆஹா இவளுக்கும் 
தெரிஞ்சுப் போச்சே! (லலிதாங்கியிடம்): கண்ணே என் பட்டத்தரசியான உன்னை யார் கண்காணிப்பது? 
லலிதாங்கி: எனக்கு என்னவோ உங்கள் எதிரிகள் தான் என் தங்குமிடத்தில் bugged கரப்பான்பூச்சிகளை அனுப்பியதாகத் தோன்றுகிறது. 
வீரபரகேசரி: உனக்கு எப்படித் தெரிய வந்தது? 
லலிதாங்கி: இரண்டு கரப்பான்பூச்சிகள் நான் தூங்கும் போது வெளியே வந்து என் காதருகே வந்து நின்று பேசத் தொடங்கின. அவை பேசியதன் சாராம்சம் 
என்னுடைய அந்தரங்க நடவடிக்கைகள் கண்
காணிக்கப்படுவது தெரியாமலேயே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே எனும் பச்சாதாபம். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது - தான் bug செய்யப்பட்டிருக்கிறோம் என்பது எப்படி அந்த கரப்பான் பூச்சிகளுக்குத் தெரியும்? அப்போது தான் இன்னொன்று தெரிய வந்தது. 
வீரபரகேசரி: என்ன? 
லலிதாங்கி: வேவுபார்க்கும் கரப்பான்பூச்சிகளை வேவு பார்ப்பதற்கு என தனியாக வேறு சில bugged பூச்சிகள் அனுப்பப்பட்டுள்ளன. 
வீரபரகேசரி (தனக்குள்): இது உண்மையெனில் எனக்கு எதிராகவே இதை யாரோ பயன்படுத்துகிறார்கள். (லலிதாங்கியிடம்): அது போகட்டும் கண்ணே. 
நீ காலையில் என்ன சாப்பிட்டாய்? 
லலிதாங்கி: அது தான் என்னுடைய அடுத்த மன 
வருத்தம். என்னால் ரொட்டியுடன் மர்மெலைட் 
இல்லாமல் சாப்பிட முடியாது எனத் தெரியுமே. ஆனால் இன்றோ ரொட்டியுடன் மிக்ஸட் புரூட்   கொடுத்து விட்டார்கள். சுத்தமாகப் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்னுடைய பணிப்பெண்கள்.  
வீரபரகேசரி: ஓ! அது போகட்டும். உனக்கு இந்த மர்மெலைட்டின் பெயருக்குப் பின்னுள்ள வேடிக்கையான கதை தெரியுமா? 
லலிதாங்கி (ஆர்வத்துடன்): அதென்ன கதை? 
வீரபரகேசரி: அது உன்னைப் போன்ற ஒரு ராணி 
சம்பந்தப்பட்ட கதையே. ஸ்காட்லாந்து நாட்டின் ராணியான முதலாவது மேரியை பற்றிக் கேள்விப்பட்டிருக்
கிறாயா? 
லலிதாங்கி: இல்லையே மன்னா. உங்களுடைய எல்லா அந்தப்புர அழகியரையும் போல நான் ஒரு படிக்காத தற்குறி அல்லவா? 
வீரபரகேசரி: ஓ... பரவாயில்லை... என் ராணியே. நீ இந்த கதையைக் கேள்.

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com