வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 301

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 301

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு சம்பந்தமான சொற்களை புரொபஸர் அறிமுகப்படுத்தும் போது money to burn என ஒன்றைக் குறிப்பிடுகிறார். அது என்னவென கணேஷ் கேட்கிறான். அதற்கு புரொபஸர் அளிக்கும் விளக்கம் என்னவெனப் பார்ப்போமா?
புரொபஸர்: People who have money to burn என்றால் குளிர்காய்வதற்கு ரூபாய் நோட்டை எரிக்கும் அளவுக்கு மூட்டை மூட்டையாக பணம் வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம். குறிப்பாக தேவையில்லாத அளவுக்கு வெளிநாட்டு கார்கள், பத்து மாடி வீடுகள், ஒவ்வொரு 
மாடியிலும் நீச்சல் குளம், பிரான்ஸில் இரண்டு நாள் விடுமுறைக்கு தனியார் விமானத்தில் பயணிப்பவர்கள் எனச் சொல்லலாம். இது ஒரு பக்கம் என்றால், not to have two pennies to rub together என்றால் ஒரு சில்லறைக் காசை இன்னொன்றுடன் உரசிப் பார்க்கும் அளவுக்குக் கூட பணமில்லாதவர்கள். கடுமையான வறுமையில் அல்லாடுபவர்கள். இது இன்னோர் எதிர்முனை. பின்னவர்கள் முன்னவர்களை வழிபடுவதே மக்களாட்சி. 
வீரபரகேசரி: Representation heuristic bias மாதிரி சொற்றொடர்களை எல்லாம் என் தேசத்தில் தடை செய்வதைப் பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும் அமைச்சரே.
அரசியல் கலாச்சார அமைச்சர்: ஆமாம் மன்னா.  எனக்கு ஒன்றுமே புரியல. அது ஏதோ ஆபத்தான விசயமா இருக்கணும்.
கணேஷ்: சார்... நீங்க பணத்தைப் பற்றி பேசுவதால் கேட்கிறேன்: இந்த cash cow  என்றால் என்ன?
புரொபஸர்: எந்த ஒரு விற்பனைப் பண்டம் நிரந்தரமாக அல்லது தொடர்ந்து லாபத்தை அள்ளித் தருகிறதோ அதுவே cash cow. சினிமாவில் சில சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கேஷ் கவ்வாக இருப்பார்கள். அவர்கள் மீது தயாரிப்பாளர்கள் பணம் கட்டினால் பணத்தை அள்ளலாம். விளையாட்டில் கிரிக்கெட், ஐ.பி.எல், கால்பந்தாட்ட கிளப்புகள் cash cowஆக இருப்பதுண்டு. மக்கள் இந்த பொழுதுபோக்குகளை எப்போதுமே வேண்டாம் எனச் சொல்ல மாட்டார்கள் என ஒரு நம்பிக்கை. 
கணேஷ்: சார்... இதுவும் ஒரு representation heuristic bias என்பது தான் என் தாழ்மையான கருத்து. இரண்டு ஆட்டத்தொடர்கள் ஒரே சமயம் நடப்பதில்லை. படங்களும் அப்படித்தான். மக்களுக்கு மாற்று வாய்ப்புகள் இருந்தால், புதிய விசயங்களைத் தேடும் பண்பாடு 
இருந்தால் கேஷ் கவ் என்பது மாறிக் கொண்டே இருக்கும். 
ஜூலி: typical two cents.

கணேஷ்: அப்படீன்னா?
ஜூலி: அப்புறமா சொல்றேன்.  
கணேஷ் (புரொபஸரிடம்): சார், நீங்க ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த not to have two pennies to rub together என்பது கேட்க வித்தியாசமாக இருக்கிறது. பென்னி 
என்றால் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட சில்லறைக் காசு தானே?
புரொபஸர்: ஆமாம், அவர்களுடைய ஒரு பவுண்ட் எனும் கரென்ஸியில் நூறில் ஒரு மடங்கு மதிப்புள்ளதே இந்த பென்னி. நம்மூரில் பத்து பைசா போல. 
ஐயர்லாந்தில் அலுவலகத்தில் சில்லரை வேலை பண்ணுகிறவர்கள் இருந்தார்கள், அவர்கள் தான் ஒரு பொருளை நகர்த்தி வைப்பது, சுத்தம் பண்ணுவதில் இருந்து வெளியே போய் எதையாவது வாங்கி வருவது, தபால் அனுப்புவது என எல்லாவற்றையும் பண்ணுவார்கள். இவர்களுக்கு கல்வித் தகுதி குறைவாக இருக்கும். 
சம்பளம் மிக மிகச் சொற்பமாக இருக்கும். இவர்களை penny boys என அழைத்தார்கள்.
கணேஷ்: கேட்கவே வருத்தமாக இருக்கிறது.
புரொபஸர்: ஆமாம், பணம் என்பது மனிதனை மகிழ்விக்க மட்டும் உண்டானதல்ல, அது மனிதனை அவமானப்படுத்தி ஒடுக்கி ஆள்வதற்காக உண்டாக்கப்பட்ட ஒன்றும் தான்.
கணேஷ்: சரி சார். ஆனால் எதற்காக இரண்டு பத்து பைசா நாணயங்களை உரசணும்? அதற்கும் வறுமைக்கும் என்ன சம்பந்தம்? ஏதாவது மூடநம்பிக்கையா?
புரொபஸர்: இதன் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
கணேஷ்: I am waiting, sir!

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com