இணைய வெளியினிலே...

நெருப்பில் தலை குளித்துக் காற்றில்  புகைக் கூந்தலை உலர்த்துகிறது... ஊதுபத்தி.
இணைய வெளியினிலே...


நெருப்பில் தலை குளித்துக் காற்றில்  புகைக் கூந்தலை உலர்த்துகிறது... ஊதுபத்தி.

ஆரூர் தமிழ்நாடன்

நேற்று என்பதையும், நாளை என்பதையும் சர்வ நிச்சயமாக...
இன்று மட்டும் தான் பேச முடியும். 

பொள்ளாச்சி முருகானந்தம்

ஓடி வரும் நீரைதடுத்து நிறுத்தி வைத்தாலும்,
பள்ளம் பறித்து தேக்கி வைத்தாலும்,
மண் மழைக்குத்தான் ஏங்கும்...
மண் வாசனை வீசி மகிழ.
நம் வாழ்க்கையும் அப்படித்தான்.

தமிழ் தமிழ்


ஒரு நாளில்  ஒரு முறையேனும் கேளேன்  என்னிடம்,
" நலமா?' என்பதாய்...
நீ கேட்காத நாளிலும் இருந்தேன் தான்... ஆயினும்,  
கேட்கும் நாட்களில்  சற்றே கூடுதலாய் நான்  நலமாய் இருக்கிறேன்.

-ரிஸ்கா முக்தார் 


சுட்டுரையிலிருந்து...


பார்ப்பதையெல்லாம் அப்படியே நம்பிடாதீங்க...
உப்பு கூட சர்க்கரை மாதிரிதான் தெரியும். 

சுந்தர் அந்தோனி

யார் மீது வேண்டுமானாலும்  எதன் மீது வேண்டுமானாலும் பாசமும் பற்றும் வைப்பதில் தவறே கிடையாது. 

ஆனால் அதையே உலகில் மிக பெரிய புனிதமான ஒன்றாகக் கற்பனை செய்து கொண்டு... 

அதன் மீது பைத்தியமாகத் திரிவது போல பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

மணவை சீபொசீ 1950

குழந்தையைத் தலைக்கு மேல் தூக்கிப்போட்டு பிடிக்கிறேன்...
பயத்துடன். 
மேலே செல்லும் குழந்தை கடவுளிடம் எதைக் கேட்டதோ ?
கண்கொள்ளாச் சிரிப்புடன் கைக்கு வருகிறது.

மஞ்சப்பை

வலைதளத்திலிருந்து...

இயற்கை சார்ந்த அக்கறையை மனிதன் தூக்கி எறிந்து விட்டதால் இன்று கரோனா சிக்கலில் வந்து நிற்கிறான். இயற்கையின் சமநிலை, பல்லுயிர்த் தன்மையைப் பாதித்ததால் இந்த சோகம். இதில் காடழிப்பும் ஒரு காரணம். உலகில் இன்று புவிவெப்பமடைதல், காலநிலை மாற்றம், கரோனா போன்ற பல்வேறு சூழல் பிரச்னைகளுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாகக் காடழிப்பு காணப்படுகின்றது.

ஆக்சிசனின் அளவை அதிகரிப்பதில் காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாவரங்கள் ஒளித்தொகுப்பு நடவடிக்கைக்காக கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்ளெடுத்து ஆக்சிசனை வெளிவிடுகின்றன.  

இன்றும் கூட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மற்றும் பல்வேறு விதங்களில் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை  உறிஞ்சிக் கொள்ளக்கூடிய விதத்தில் செயற்கை மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மரங்கள் இயற்கையான தாவரங்களைப் போன்று உயிர்கலங்களைக் கொண்டிராவிட்டாலும், மரங்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டே  தொழில்நுட்பத்தின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளன கிராம மக்கள் வறுமை காரணமாக விறகுளை எடுத்தல், இலாபமீட்டும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் மரம் எடுத்தல் போன்றவற்றாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. மிகவும் வறுமையான நாடுகளில் வாழுகின்ற மக்கள் தமது வயிற்றுப்பிழைப்புக்காக சட்டவிரோதமான முறையில் காடுகளை வெட்டி விறகாக விற்கின்றனர். கென்யா, காங்கோ போன்ற நாடுகளில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோர் விறகுத் தேவைகளுக்காக காடுகளை அழிக்கின்றனர். மழைவீழ்ச்சி குறைவடைதல், மண்ணரிப்பு ஏற்படுதல், புவிவெப்பமடைதல், மண்ணின் ஈரத்தன்மை குறைவடைதல், காற்றின் வேகம் அதிகரித்தல் ஆகியவையும் சிரமம் தருகின்றன. இவை பல்லுயிர் சமநிலையைப் பாதித்து கரோனா போன்ற கிருமிகளின் தாக்கத்திற்கும் பரவலுக்கும் காரணங்களாகி விட்டன. கரோனாவைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது நம் மூச்சை நிறுத்தி விடும்.
http://rpsubrabharathimanian.blogspot.com/
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com