வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 304

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 304

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது பொருளாதார ஏற்றதாழ்வு சம்பந்தமாக கணேஷ் ஒரு கருத்தைச் சொல்ல, அதற்கு ஜூலி இது ஒரு typical two cents என்கிறது. அது என்ன என கணேஷ் புரொபஸரிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது இடையே வரும் ஜூலி to a fault எனும் சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. அதன் பொருள் என்ன?

ஜூலி: To a fault என்றால் மிகுதியாக, மிகையாக, தேவைக்கு அதிகமாக எனப் பொருள். ஒருவர் அக்கறையாக இருக்கலாம். ஆனால் பிரச்னை வரும் அளவுக்கு அக்கறை காட்டினால் he is attentive to a fault. ஒருவர் கடுமையாக உழைக்கலாம், தப்பில்லை. ஆனால் உடலும் மனமும் நிலைகுலையும் அளவுக்கு உழைத்தால் he is hard-working to a fault. 

கணேஷ்: உழைப்பிலுமா அப்படி மிகுதியாக உழைப்பைக் காட்ட முடியும்? 
ஜூலி: ஏன் முடியாது? சில மாணவர்கள் ரொம்ப கடுமையாக உழைப்பார்கள். இரவு பகலாகப் படிப்பார்கள். அந்த களைப்பில் தேர்வு அறையில் தூங்கி விடுவார்கள். சிலர் ஜிம்மில் கன்னா பின்னாவென வொர்க் அவுட் பண்ணி காயம் அடைவார்கள். இதே போலத் தான் conscientious to a fault. 

கணேஷ்: அதென்ன? 

ஜூலி: Conscientious என்றால் மிகுந்த கடமை உணர்வுடன் இருப்பது. உதாரணமா, நம்ம புரொபஸர் தேர்வுத்தாள் திருத்தும் போது ஒரு தேர்வுத்தாளில் ஒரு பதிலுக்கு பத்துக்கு 5 போடுவதா நான்கு அரை மதிப்பெண் போடுவதா என நீண்ட நேரமா யோசிச்சிட்டு இருப்பார். தனக்குத் தானே பேசிக்குவார். நடந்து நடந்து யோசிப்பார். அப்புறம் அதில் உள்ள நிறை குறைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொண்ணுக்கும் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் என கணக்குப் போட்டு கடைசியில் அது நாலுக்குக் கீழாகவோ ஆறுக்கு மேலாகவோ போக தன் மதிப்பீட்டில் தப்பு 
வந்திச்சுன்னு திரும்பவும் உட்கார்ந்து தலையைச் சுவரில் முட்டிப்பார். கடைசியில் நான்கு மணி நேரமா ஒரே வினாத்தாளை திருத்தியதில் ஐம்பது வினாத்தாள்களை முடிப்பது தாமதமாகி தன் துறைத்தலைவரிடம் திட்டும் வாங்குவார். என்ன கொடுமை என்றால் இவ்வளவுக்கு நாலரை மதிப்பெண் போட்டால் அதை round up பண்ணி மதிப்பெண்ணை அப்லோட் பண்ணினால் அது இயல்பாகவே ஐந்து மதிப்பெண் ஆகி விடும். ஆனாலும் அவருக்கு மனசு ஒப்பாது. அப்படியானவர்களைத் தான் conscientious to a fault என்போம். 
கணேஷ்: ஆமா ஜூலி, மார்க் போடுறதில இவரு சரியான கஞ்சூஸ். அதை ஆங்கிலத்தில் எப்படி சொல்றது? 
ஜூலி: Stingy.  Miserly. Niggardly. இப்படி பல வார்த்தைகள் உள்ளன.  
புரொபஸர்: டேய்... 
கணேஷ்: சாரி சார். 
கணேஷ் (ஜூலியிடம்): இன்னொரு பிரச்னை. 
ஜுலி: சொல்லு. 
கணேஷ்: கான்ஷியன்.. அதை எப்படிச் சரியா சொல்றது? 
ஜூலி: Conscience என்றால் மனசாட்சி. கான்ஷியன்ஸ். மனசாட்சிப்படி நடப்பது தான் conscientious என்பது மனசாட்சிப்படி நடப்பது. இதை சுலபமாக "கான்ஷியன்ஸ்' 
என்பதுடன் "ஷியஸ்' என்பதையும் சேர்த்து கான்ஷியன்ஷியஸ்' என்று சொல்லணும்.  
கணேஷ்: அந்த "ஷ', "ஷி' அது வர மாட்டேங்குதே... 
ஜூலி:  அது எளிய பயிற்சி மூலம் வந்து விடும். "ஸ' எனும் போது நாக்கு மேல் நோக்கி சற்றே வளையும். அதே நேரம் "ஷ' எனும் போது நாக்கு சற்றே நேராக விரைக்கும். இந்த வித்தியாசத்தை கவனித்து செய்தால் இதை துல்லியமாக உச்சரிக்க முடியும். உச்சரிப்பு அடிப்படையில் ஒரு 
அறிவியல். யாராலும் கற்க முடியும். 
கணேஷ்: ஓகே
ஜூலி: Conscientious என்பதற்கு இணைச்சொற்கள் scrupulous, diligent, meticulous, studious, dutiful, dedicated.  
 
கணேஷ்: நன்றி ஜூலி. அந்த two cents என்பதை இன்னும் சார் விளக்கலையே... 
புரொபஸர்: இருடா! நம் மாமன்னர் ரொம்ப பதற்றமாக இருக்கிறார் என்னவெனக் கேட்போம்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com