வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 296

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றுஇருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 296


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றுஇருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

வீரபரகேசரி தன் அமைச்சர்களிடம்: சரி, இவ்வளவு நாளும் நீங்கள் எல்லாருமாக வேலை செய்யாம you have been 
feathering your nest.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு - உங்களை நான் அமைச்சராக்கிய போது you were as thin as a rake. 

கணேஷ் புரொபஸரிடம்: சார் rake என்றால்?
புரொபஸர்: ரேக் என்றால் பெருக்குவதற்கு பயன்படுத்தும் நீண்ட குச்சி உள்ள குப்பை வாரி. அதைப் போல ஒல்லியாக இருப்பவர்களை as thin as a rake என்பார்கள்.
ஆனால் இப்போது you have all grown potbellied.  புரியுதா?
தேர்தல் அமைச்சர்: ஆமாம் மன்னாதி மன்னா. நாங்கள் அதிகமாக எடை போட்டு விட்டோம். அதனால் நாங்கள் எல்லாரும் டயட் இருந்து, நன்றாக உடற்பயிற்சி செய்து ஒல்லியாகணும்.
வீரபரகேசரி: ஓஹோ... அப்புறம்?
தேர்தல் அமைச்சர்: Nest ... பறவைகளோடு கூடு. நாங்கள் ஆளுக்கு ஒரு பறவையை மரத்தில் வைத்து வளர்க்கலாம். 
வீரபரகேசரி: ஆஹா! எதுக்காம்?
தேர்தல் அமைச்சர்: செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு. அதோடு இயற்கையையும் காப்பதற்கு. 
வீரபரகேசரி: அடடா! யோவ் லூசு. நான் சொல்றது நீங்க எல்லாரும் கொடுத்த வேலையைப் பண்ணாம சம்பாரிச்சு தொந்தியும் தொப்பையுமா இருக்கிறீங்க. உங்களோட சொத்து விவரத்தை எடுத்துப் பார்த்தேன் - நான்காண்டுகளில் ஆயிரம் மடங்கு வளர்ந்திருக்கிறது உங்க சொத்து. You have been on the fiddle since the day you swore in.

தேர்தல் அமைச்சர்: மன்னியுங்கள் மன்னர் மன்னா! நான் வேண்டுமானால் ஆயிரம் தண்டனிடவா?
வீரபரகேசரி: என்னவோ பண்ணித் தொலை.
கணேஷ் புரொபஸரிடம்: சார், fiddle என்றால் வயலின் தானே?
புரொபஸர்: ஆமா. ஆனா அது மட்டுமில்ல fiddle  என்றால் ஒரு நரம்பிழைக் கருவி. நாட்டுப்புற பாடல்களில் பயன்படுத்தப்படுவது. அது போல வயலின் என்றும் பொருள் உண்டு.
கணேஷ்: அதில தான் சார் எனக்கு சந்தேகம்.
புரொபஸர்: என்ன?
கணேஷ்: அதுக்கும் இந்த அமைச்சர்களுக்கும் என்ன சம்பந்தம்?
புரொபஸர்: அதுவா? Fiddling about என்றால் நேரத்தை சும்மா வீணடிப்பது எனப் பொருள். அதாவது சும்மா வயலினை வைத்து "சொய்ங் சொய்ங்' என இழுத்துக் கொண்டிருப்பார்களே, டியூன் செய்கிறேன் எனும் சாக்கில். அதை வைத்தே wasting around எனும் பொருளில் fiddling about பயன்பாட்டுக்கு வந்தது.
வீரபரகேசரி: இல்லை புரொபஸரே... On the fiddle என்றால் பொருள் வேறு.
தேர்தல் அமைச்சர்: அதான்யா நானும் யோசிச்சிட்டு இருக்கேன். நாம தான் நேரத்தை வீணடிக்காம மும்முரமா வேலை பண்ணுறோமே!
வீரபரகேசரி: ம்க்கும்... On the fiddle என்றால் இன்னொரு பொருளும் உண்டு. அதாவது engaged in cheating or swindling.

கணேஷ்: ஓ... ஏமாற்றுவதா? 
புரொபஸர்: ஆமா அது தான். Fiddling என்பதற்கும் கொச்சை ஆங்கிலத்தில் ஊரை ஏமாற்றி உலையில் போடுவதென பொருள் உண்டு. குறிப்பாக to cheat in a cheap manner.
கணேஷ்: ஆனா சார்... வயலின் கலைஞர்களுக்கும் ஏமாற்று
வதற்கும் என்ன சம்பந்தம்? 
புரொபஸர்: நல்ல கேள்வி. நீரோ மன்னனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
தேசப்பற்று பிரசார அமைச்சர்: ஐயா, நீரோ எனும் சொல் நமது நாட்டில் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது.
கணேஷ்: அப்படியா? ஏன்?
தேசப்பற்று பிரசார அமைச்சர்: இணையத்தில் நிறைய இளைஞர்கள் நமது மாமன்னரை பழங்கால மன்னர் நீரோவுடன் ஒப்பிடுகிறார்கள். அதனால் தான் நீரோ எனும் சொல்லையே தடை பண்ணி விட்டோம்.
கணேஷ்: ஏன் அமைச்சரே?
தேசப்பற்று பிரசார அமைச்சர்: உங்களுக்கே தெரியும் இல்லையா? ரோம் நகரம் எரிந்த போது மன்னர் நீரோ அதைப் பற்றின எந்த அக்கறையும் இன்றி பிடில் வாசித்துக் கொண்டு ஜாலியாக இருந்தார் என. அதில் இருந்து இப்படி சுயநலத்துடன் செயல்பட்டு மக்களை ஏமாற்றுவது எனும் பொருள் on the fiddledக்கு வந்திருக்கலாம். அப்புறம் இன்னொரு தோற்றக் கதையும் உண்டு.
கணேஷ்: என்ன?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com