இணைய வெளியினிலே...

என் முகத்தை நானே பார்த்துக் கொள்வதைப் போல ஒரு கொடுமை உலகில் வேறேதேனும் உண்டா?
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

என் முகத்தை நானே பார்த்துக் கொள்வதைப் போல ஒரு கொடுமை 
உலகில் வேறேதேனும் உண்டா?

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

எல்லாத் தெருக்களிலும் முகமூடி அணியாமல் திரிவது...
மரணம் மட்டுமே.

இந்திரன் ராஜேந்திரன்

சொட்டுச் சொட்டாய் சொற்கள் விழுகின்றன...
உட்புறம் தாழிட்ட கதவுகளை வெளிப்புறத்திலிருந்து திறப்பதற்காக.

செந்தில் பாலா

சட்டென கதவு திறந்தது. ""யார்?'' என்றேன்.
""தானாகத் திறந்தால் தெரியாதா நானென்று?''  என்றது காற்று.

நேசமிகு ராஜகுமாரன்

சுட்டுரையிலிருந்து...

தங்கள் பிள்ளைகளை வாயாரக் கொண்டாடுவதற்கு சாதனையோ... காரணமோ...
இந்த வெள்ளந்தி மக்களுக்குத் தேவையில்லை

வெங்கட்ராஜ் பித்தன்

யார் சொல்லியிருந்தாலும், 
எங்கு படித்திருந்தாலும், 
நானே சொன்னாலும் 
உனது புத்திக்கும் 
பொது அறிவுக்கும் 
பொருந்தாத எதையும் நம்பாதே. 

நந்தினி


உலகில் நாம் விரும்பும் அத்தனையும் 
இருமுறை தான் அழகாக தெரியும்...
ஒன்று அடைவதற்கு முன்பு...
இரண்டு இழந்ததுக்கு பின்பு. 

ரிஷி

அலுவலகத்தில் பணிபுரிந்தபோது. அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசம் தெரிந்தது. 
இப்பவோ வீட்டில் இருக்கிறேன். ஆனால் அலுவலகத்தில் இருப்பது போன்ற உணர்வு.
ஒன்றுமட்டும் நன்றாக தெரிகிறது, அது பணியில் இருக்க வேண்டும் என்பது.

ஜெயபிரகாஷ்

வலைதளத்திலிருந்து...

உலகின் எந்த நாட்டு மூலையிலிருந்தாலும், அவரவருக்கான சவால்களும் பிரச்னைகளும் அல்லல்களும் இருந்தேதானிருக்கும். சோர்ந்திருந்து, குறைசொல்லிப் புலம்புவதாலும் நம்பிக்கையிழந்து போய் இருப்பதாலும் மேன்மை கிட்டிவிடாது. தரக்குறைவான அரசியல், முறைகேடு, ஊழல், தடித்தனம், காமுகத்தனம், வெறுப்பியக்கம், பிரித்தாளும் போக்கு என எல்லாமும் இருக்கும்தான். இவையெல்லாம் இயல்பானதே. எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்; ஒவ்வொரு குடிமகனும் இவற்றை இனம் கண்டு தத்தம் கடமையைச் செய்ய முற்படும்போது, தீர்வு கிட்டியே தீரும். தலைவர்கள், கொள்கை கோட்பாடு கருதிச் சித்தாந்தங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். அவற்றின்வழி  பயணிக்க முற்படும் தறுவாயில் நமக்கான தீர்வு அமைந்தே தீரும். உணர்வுகளுக்கு முந்தையதாக சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடல் வேண்டும். 

ஒரு மனிதனின் மதிப்பீடு, அளவீடு என்பது அவன் வசதியாகவும் இன்பத்தோடும் இருக்கும் போது பெற்றிருப்பது அல்ல. மாறாக, சவால்களை எதிர்கொள்ளும் போதும் போராட்டங்களுக்கு ஆட்படும் போது எத்தகையவனாய் இருந்தான் என்பதேயாகும். குரல்கொடுக்க வேண்டிய இடத்தில் குரல் கொடுத்தானா? செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலாற்றினானா?  சீராகப் பணி செய்கின்றானா?  இவைதாம் மனிதனின் 
மாண்புகள். 

போராடுவதென்பது நம் கலாசாரம், பண்பாடு, இனத்தின் கூறா, அல்லவாயென்பதல்ல; மாறாக, போராடுவதென்பது எந்தவோர் உயிருக்குமானதான அடிப்படைத் தேவை. அதற்குச் செவிமடுப்பதும் மதிப்பளிப்பதும் நல்லதொரு மனிதனுக்கு அழகு.

http://maniyinpakkam.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com