இணைய வெளியினிலே...

ஒரு பறவை திரும்பிப் பார்ப்பதில்லை,அது கடந்து வந்த தூரத்தை.பதற்றமுறுவதில்லை,அது செல்ல வேண்டிய தொலைவால்.
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....


கண்கள் மட்டும் தெரிய, 
கவசத்தோடு இருத்தலென்பது
அவசியமாகிப் போனதில், 
ஒளிந்திருந்து சங்கடப்படுவதை விட,
மலராமலேயே வாடிவிடுகின்றன,
பல முகங்களின் புன்னகை.

கனகா பாலன்

ஒரு பறவை திரும்பிப் பார்ப்பதில்லை,அது கடந்து வந்த தூரத்தை.
பதற்றமுறுவதில்லை,அது செல்ல வேண்டிய தொலைவால்.
ஒன்று,  அது  பறந்துகொண்டே இருக்கிறது.
மற்றொன்று, பறப்பதற்கு முன் கிளைவிட்டுக் கிளை மேவி 
அது தீராது பாடிக் கொண்டு இருக்கிறது.

வண்ணதாசன் சிவசங்கரன்

ஒரு சின்ன மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை வெல்லும் வலிமை,
இருட்டுக்கு இல்லை எனும் நம்பிக்கைதான் என்னை எழுத வைக்கிறது.

இந்திரன்


சுட்டுரையிலிருந்து...


மன அழுத்தமா இருக்குன்னு மீன் வாங்கி வளர்த்தேன்.
இப்போ மீன் தொட்டியைக் கழுவுறதை நெனைச்சா அதை விட 
மன அழுத்தமா இருக்கு. நகைச்சுவை மட்டும்

மரணத்துக்கு இருந்த மரியாதையையும் சேர்த்து கொன்று குவிக்கிறது...
கரோனா. 

ஜீயென்


நம்புகிறோம் என்பதை விடயாரை நம்புகிறோம் என்பதில் உள்ளது நம்பிக்கை!

அபு கத்திஜா


ரசிப்பவர்கள் ரசித்துக் கொண்டிருங்கள்...
ரசனைக்கும் மீறின இயல்பிலேயே நாங்கள் கடத்திக் கொள்கிறோம்
இவ்வாழ்வை.
மழை... 
எங்களுக்கு மாபெரும் வாழ்வாதாரம்.

நட்சத்திரா


வலைதளத்திலிருந்து...


பாதுகாப்பாகச் சாட் செய்ய வழிமுறைகள்:
இணையம், பதிவுலகம், குழுமங்கள் என்பதெல்லாம் எந்த அளவுக்கு மனிதர்களை இணைக்கின்றனவோ அதே அளவு பிரச்னைகளையும் கொண்டு வருகின்றன. முகம் தெரியாத யாருடனோ சாட் செய்யும் போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்... இல்லை இல்லை... ஆண்களுக்குத்தான் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்காகப் போராட யாருமே வருவதில்லை. 
"பதிவுலக ஆண்களின் பரிதாபநிலை கண்டு ஒரு 
பெண்ணாக வெட்கப்படுகிறேன்' என்று எழுதினால் என்னை 
பெண்ணாதிக்கவாதிகள் குதறிவிடுவார்கள் என்று பயப்பட்டு ஒன்றும் சொல்லாமல் போகிறேன்...
சரி, விஷயத்துக்கு வருவோம்...
பாதுகாப்பாகச் சாட் செய்ய என்ன வழி?

10 ...................
9.................
8.........
7........
6......
5. கணினியை ஆஃப் செய்யுங்கள்.
4.தொலைபேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும்  தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.
3.மூலைத் தெருவில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் போரடித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சென்று சாட் செய்யுங்கள்.
2.அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்லுங்கள்; முடிந்தால் 
குழந்தைகளை அழைத்துக் கொண்டு.
1.அவர்கள் வீட்டிலிருப்பவர்களுடன் அளவளாவுங்கள். 
குழந்தைகளை விளையாட விடுங்கள்.
இவைதான் எனக்குத் தெரிந்த சிலபாதுகாப்பான சாட் வழி 
முறைகள். இன்னும் இருந்தால் பகிர்ந்து கொள்ள 
வேண்டுகிறேன். 

http://deepaneha.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com