வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 300

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 300

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது கணேஷ் பொருளாதார ஏற்றத்தாழ்வு சம்பந்தமாக ஒரு கேள்வியை எழுப்புகிறான்.  
கணேஷ்: சார், ஒரு கேள்வி: நாம் ஏன் மக்கள் வறுமையில் அல்லாடும் போது மன்னர்கள் அக்கறையின்றி பெரும்பணத்தை செலவழித்து அரண்மனைகள் கட்டுவதை, அவற்றில் சொகுசாக வாழ்வதை மக்கள் கேள்வி கேட்பதில்லை?
புரொபஸர்: இதைத் தான் representation heuristic bias என்கிறார்கள்.
கணேஷ்: என்ன சார் இது? நான் கேள்விப்பட்டதே இல்லையே?
புரொபஸர்: சொல்றேன்.
புரொபஸர்: கணேஷ், நீ நடத்தைசார் நிதியாண்மை கேள்விப்பட்டிருக்கியா? Behavioural finance.  இத்துறையில் உள்ள ஒரு முக்கிய கோட்பாடுதான் representation heuristic bias. Representation என்றால் பிரதிநிதித்துவம். Heuristic என்றால் ஒரு பிரச்னைக்கு தர்க்கரீதியான, புறவயமான தீர்வை நாடும் அவகாசமோ திறனோ இல்லாதபோது நாம் ஒரு குத்து மதிப்பான நடைமுறை தீர்வை நாடுவது. Trial and error என்று சொல்வோம் இல்லையா, நிறையத் தவறுகளைச் செய்து இறுதியில் நாமாக சரியான வழியைக் கண்டறிவது இது heuristic தான். இதை குறுக்குவழியில் தீர்வை நாடுதல் என வரையறுக்கலாம். இன்று ஒருவர் போனையும், அதில் கிடைக்கும் ஆப்களையும் வைத்து ஒரு படத்தை எடுக்கும் போது பல சவால்கள் ஏற்படும். அவற்றை இணையத்தில் தகவல்களைத் தேடியும், பலவிதங்களில் நடைமுறை விடைகளை நாடியும் முன்னேறலாம். ஆனால் இந்த ட்ங்ன்ழ்ண்ள்ற்ண்ஸ்ரீ நமது சிந்தனையின், புரிதலில் ஏற்படுத்தும் தாக்கம் ஆபத்தானது. 
கணேஷ்: எப்படி சார்?
புரொபஸர்: இரண்டு விசயங்களை அருகருகே வைத்தால் அவற்றுக்கு இடையே ஒரு பொருத்தத்தை நாம் நாடுவோம். Don’t trust a skinny chef எனும் பழமொழி இப்படித் தோன்றியது தான். நம்முடைய ஊரில் பிரசித்தமான சமையல் நிபுணர்கள் புஷ்டியாக இருப்பார்கள்; உடனே அவர்களுடைய சாப்பாடும் சுவையாக இருக்கும், அதை ரசித்து சாப்பிட்டே குண்டாகி விட்டார்கள் என நாம் ஒரு தவறான கணிப்பைச் செய்
கிறோம். ஒரு சிவப்பான பெண் மாடல் விளம்பரத்தில் வந்து என்னுடைய முகம் இப்படி பளபளப்பாக இருக்க  இந்த களிம்பை பூசுகிறேன் எனச் சொன்னதும் நாம் நம்பி விடுகிறோம் அல்லவா? ஓர் அரசியல்வாதி மக்களோடு மக்களாக பேருந்தில், ரயிலில் பயணித்தால் அவர் நம்மைப் போல எளிமையானவர் என நினைக்கிறோம். ஆனால் அவர் ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருப்பார். அந்த விடுதிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி இருப்பார். தன்னுடைய பிரசாரங்களின் போது தன்னை எளிமையாகக் காட்டும் படங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பார். மக்களும் சுலபத்தில் ஏமாந்து விடுவார்கள். ஏன் தெரியுமா?
ஜூலி: மக்களுக்கு தர்க்கரீதியாக சான்றுகளுடன் அலசி முடிவெடுக்க அவகாசமோ வாய்ப்போ இருக்காது.
புரொபஸர்: ஆம், இதைத் தான் representation bias  என்கிறோம். ஆண்ஹள் என்றால் மனச்சாய்வு.  
ஜூலி: தாடிகளெல்லாம் தாகூரா, மீசைகளெல்லாம் பாரதியா? 
புரொபஸர்: கரெக்ட். இப்போது நாம் ஒரு கேள்வியை எழுப்பணும்: மக்கள் மிக்குறைவான வசதியுடன் வாழ்
கிறார்கள், தங்களுடைய பிரதிநிதியான ஒரு மன்னர் அல்லது ஒரு பிரதமர், முதல்வர் ஏன் அனைத்து வசதிகளுடனும் பிரமாண்டத்துடனும் கம்பீரமாக வாழணும் என எதிர்பார்க்கிறார்கள்? 
கணேஷ்: மன்னர் இடத்தில் தம்மை வைத்து தவறாக சிந்திக்கிறார்கள்; தாம் ஏழைகள் என்பதால் மன்னரும் ஏழையே; மன்னர் பணக்காரர் என்பதால் தாமும் பணக்காரரே என மக்கள் கற்பனை பண்ணி நெகிழ்கிறார்கள்.  
புரொபஸர்: அதனால்தான் ostentatious ஆன, அதாவது படோடோபமாக தம் செல்வச்செழிப்பைக் காட்டுகிற, சர்வாதிகாரிகள் ஏழைகள் மத்தியில் பிரபலமான தலைவர்களாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் you have people who have money to burn and இன்னொரு பக்கம் you have those who dont have two nickels to rub together and the latter always worship the former in a democracy.

கணேஷ்: சார், money to burn என்றால் என்ன?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com