வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 295

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 295


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில்புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது உரையாடலின் போது புரொபஸர் சந்தர்ப்பம் சார்ந்த நகைமுரண் (situational irony) பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஜூலி Brutus is an honourable man என்றொரு மேற்கோளைக் குறிப்பிடுகிறது. அதன் பொருள் என்ன என அவர் விளக்கும் போது வீரபரகேசரி தனது நாட்டில் எல்லாரையும் தன்னைப் புகழ்ந்து மட்டுமே பேச வேண்டும், தனக்கு எதிராகப் பேசுகிறவர்களுக்கு கடும் தண்டனைகள் அளிக்க ஓர் அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.

அப்போது புரொபஸர் இது ஜார்ஜ் ஆர்வெல்லின் Nineteen Eighty Four நாவலில் வரும் thought police-ஐ ஒத்திருக்கிறது எனக் கூறி விட்டு, இதில் இருந்தே thoughtcrime எனும் சொல் ஆங்கிலத்துக்கு வந்தது என்கிறார். அது என்ன thoughtcrime என கணேஷ் கேட்கிறான்.

புரொபஸர்: Thoughtcrime என்பது ஒற்றைச் சொல். அதாவது இரண்டு சொற்கள் அல்ல, thought, crime இரண்டையும் சேர்த்து ஒரே சொல்லாகவே எழுத வேண்டும். இதன் பொருள் சுவாரஸ்யமானது. வெறுமனே சிந்தனைக் குற்றம் எனப் புரிந்து கொள்ளலாகாது.
Status quoக்கு எதிராக யாராவது செயல்படுவது, சர்ச்சைக்குரிய விதமாகப் பேசுவது, சாஸ்திர சம்பிரதாயங்களை விமர்சிப்பது எல்லாம் thoughtcrime என கருதப்படும். வலதுசாரி சர்வாதிகார அரசுகள் பொதுவாக thoughtcrime இல் ஈடுபடும் புரட்சி சிந்தனையாளர்களைக் கடுமையாக ஒடுக்கும்.
கணேஷ்: சார், இந்த status quo என்றால் என்ன? அடிக்கடி இதைக் கேள்விப்படுகிறேன். அர்த்தம் தான் புரியல.
புரொபஸர்: Status quo என்பது ஒரு லத்தீன் சொற்றொடர். இதன் பொருள் the existing state of affairs. அதாவது பொதுவாக தற்போதுள்ள நிலை. இதற்கு இன்று பொருள் சமூகத்தால், அரசால், அதிகாரத்தால் ஏற்கப்பட்ட நிலை என மாறி உள்ளது. சமூகவியலைப் பொருத்தமட்டில், சமூகத்தில் நிறுவப்பட்டு உள்ள கட்டமைப்புகள், விழுமியங்களே statusquo. நிறுவனமயப்பட்ட மதம் என்பது ஏற்றத்தாழ்வின் status quo -ஐ தக்க வைப்பதற்காக மத்தியதர வர்க்கம் பயன்படுத்தும் வழிமுறை என கார்ல் மார்க்ஸ் சொல்லுகிறார். ஆக புரட்சிகரமாகச் சிந்தித்தல், எதிர்கேள்வி கேட்பது எல்லாம் status quo வை மீறுவதாகவும்.
அதனாலே இவை thoughtcrime-உம் ஆகும்.
ஜூலி: புரொபஸர், நீங்க சொல்ல
வந்ததை விட்டு நெடுந்தூரம் வந்து விட்டீர்கள். You lost track.
புரொபஸர்: ஆமால்ல... சரி, வீரபரகேசரி சொன்னார் அல்லவா, அரசாங்க கட்டுப்பாடுகள், அவற்றை எப்படி உடைப்பது என ஆண்டனிக்கு தெரியும். அவன் அதற்கு பயன்படுத்தியது தான் மொழிவய நகைமுரண் (verbal irony).
கணேஷ்: அது என்ன?
புரொபஸர்: பேசும் போதோ, எழுதும் போதோ ஒன்றைச் சொல்லி மற்றொன்றைக் குறிப்பது. நீ பரீட்சையில் பெயிலாகிவிட்டால் உன் அப்பா உன் மதிப்பெண் பட்டியலை வாங்கிப் பார்த்து, ""ஆகா உன்னைப் பெற நான் முன் ஜென்மத்தில் தவம் செய்து வரம் வாங்கி இருக்
கிறேன்'' என்றால் அது மொழிவய நகைமுரண். உன் காதலி ஒருநாள் கேவலமான கலர் காம்பினேஷனில் ஆடை அணிந்து வரும்போது நீ அவளிடம் போய், ""இன்னிக்கு நீ தேவதை போல இருக்கிறாய்?'' என்று சிரித்துக் கொண்டு சொன்னால் அது மொழிவய நகைமுரண்.
கணேஷ்: சிரிக்காமல் சொன்னால்?
ஜூலி: அவள் அதை அப்படியே நம்பி விடுவாள்.
புரொபஸர்: ஆமாம், சில நேர neutral ஆன சூழலில் நீ உன் குரலில் கிண்டல், முகத்தில் ஒரு புன்னகை, புருவங்களை உயர்த்துவது ஆகிய சமிக்ஞைகள் மூலம் இது நகைமுரண் என உணர்த்த வேண்டும். அப்போது தான் verbal irony எடுபடும். ஆனால் சூழலைப் பொறுத்து நீ இதை ரொம்ப சீரியஸூன தொனியில் பயன்படுத்தி முரணை உணர்த்தலாம். அதைத்தான் ஆண்டனி அன்று செய்தார். அவர் ஆண்ட புரூட்டஸின் ஒவ்வொரு குற்றமாகப் பட்டியலிட்டு, ஆனாலும் புரூட்டஸ் ஒரு கண்ணியமானவர் எனும் பொருள்பட yet Brutus is a
honorable man என தவறாமல் சொன்னார். இதைப் புரிந்து கொண்டு மக்கள் கொந்தளித்து புரூட்டஸூக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com