வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் பிஇ., பி.டெக் முடித்து மத்திய, மாநில அரசுத் துறைககளில் அதிகாரியாகப் பணியாற்றிருக்க வேண்டும். 
வேலை... வேலை... வேலை...


டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பணி:  அசிஸ்டன்ட் மேனேஜர் - புரோகிராம் மேனேஜ்மென்ட்   - 01
பணி: சீனியர் டைரக்டர் (சீஃப் டெக்னாலஜி ஆபீசர்) - 01

தகுதி: பொறியியல் துறையில் பிஇ., பி.டெக் முடித்து மத்திய, மாநில அரசுத் துறைககளில் அதிகாரியாகப் பணியாற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு : 58 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.37,400 - ரூ.67,000  

விண்ணப்பிக்கும் முறை : https://ora.digitalindiacorporation.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் பணி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற விவரங்கள் அறிய: https://dic.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று காணுங்கள்.  

அசிஸ்டன்ட் மேனேஜர் - புரோகிராம் மேனேஜ்மென்ட் பணிக்கு

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.08.2021  

சீனியர் டைரக்டர் (சீஃப் டெக்னாலஜி ஆபீசர்) 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.08.2021 

இந்திய சுரங்க தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை

பணி:  ஜூனியர் அசிஸ்டன்ட்  
காலியிடங்கள்: 73 

வயது வரம்பு:  30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 35 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீன் தேர்வு, துறைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ கலெக்ட் லிங்க் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்திர், பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nfr.iitism.ac.in/index.php/recruitment/user.login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://www.iitism.ac.in/assets/uploads/news_events/admin/16-07-2021-12:07:59_notices.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.08.2021

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் வேலை

மொத்த காலியிடங்கள்: 500
பணி: ஸ்டாஃப் நர்ஸ்

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி நர்சிங், எம்.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயது வரம்பு:  22 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.  
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

மேலும் விவரங்கள் அறிய: www.omcmanpower.com அல்லது https://www.omcmanpower.com/jobInfo.php?jid=153 என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் தேதி: 31.8.2021

விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

பணி: கான்ஸ்டபிள் (ஸ்போர்ட்ஸ் கோட்டா -  2021)

காலியிடங்கள்: 65
சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100
வயது வரம்பு: 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட விளையாட்டில் பெற்றிருக்கும் சாதனைகள், உடற்தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சேர்க்கை கார்டு அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை  ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

அனைத்துப் பிரிவையும் சேர்ந்த  பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.09.2021 

சமூக பாதுகாப்புத் துறையில் வேலை  


பணி: திட்ட மேலாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000 

தகுதி: பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.  சமூகப்பணி, குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியல், சமூகவியல் போன்ற பிரிவுகளில்  பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பணி அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மிகாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.  

பணி: திட்ட உதவியாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.10,000 

தகுதி: பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.  தரவு உள்ளீடு கொண்ட கணினிகளில் அடிப்படை அறிவு மற்றும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  

வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதி, அனுபவம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.tn.gov.in/jobopportunity என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
இயக்குநர், மாநில தத்து வள ஆதார மையம், சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை -10. 

மேலும் விவரங்கள் அறிய: https://cms.tn.gov.in/sites/default/files/job/sara_recruitment_060821.pdf  என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.09.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com