2021-இன் சிறந்த செயலிகள்!

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் செயலிகள்  நவீனமயம் கண்டு வருகின்றன. 2008-இல் வெறும் 50 செயலிகளுடன் தொடங்கப்பட்ட "கூகுள் பிளே' இன்று 28 லட்சம் செயலிகளுடன் முன்னணியில் உள்ளது.
2021-இன் சிறந்த செயலிகள்!

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் செயலிகள்  நவீனமயம் கண்டு வருகின்றன. 2008-இல் வெறும் 50 செயலிகளுடன் தொடங்கப்பட்ட "கூகுள் பிளே' இன்று 28 லட்சம் செயலிகளுடன் முன்னணியில் உள்ளது. 

புதிது புதிதாய் சேவைகளை வழங்கும் செயலிகளை வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு ஆண்டுதோறும் கூகுள் பிளே கொண்டு வந்து கொண்டிருக்கிறது. 

இப்படி லட்சக்கணக்கான செயலிகளில் பயன்பாட்டாளர்களின் ஆதரவைப் பெற்ற 2021-ஆம் ஆண்டின் சிறந்த செயலிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில் தியானம் மற்றும் தூக்கத்தை வரவழைக்க உதவும் "பேலன்ஸ்' என்ற செயலி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தச் செயலியை அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி உள்ளனர்.

"நல்லது' என்ற பட்டியலில் "எம்பதி', "மென்டார் ஸ்பேஸஸ்', "ஸ்பிச்சிபை' ஆகிய செயலிகள் இடம்பெற்றுள்ளன. 

தினசரி பயன்பாட்டுப் பட்டியலில் "பிளாஸம்', "போட்டோ ரூம்', "ரேபிட்'  ஆகிய செயலிகளும், வேடிக்கை பட்டியலில் "கிளப் ஹவுஸ்', "நோப்லி', "வாட்டிபை' ஆகிய செயலிகளும் இடம்பெற்றுள்ளன. 

தனிநபர் மேம்பாட்டு செயலிகளில் "பேலன்ஸ்', "கிளமன்டைன்', "அப்டைம்' ஆகிய செயலிகளும், டேப்களுக்கு ஏற்ற சிறந்த செயலிகளாக கான்வா, கான்சப்ட்ஸ், ஹவூஸ் ஆகிய செயிலிகளும் இடம் பிடித்துள்ளன. 

ஆடைகள் அணிவதில் சிறந்த செயலியாக "காம்', "மைபிட்னஸ்பால்', "ஸ்லீப் சைக்கிள்' ஆகியவையும், கூகுள் டிவி செயலிகளில் "டிஸ்னி பிளஸ்', "இஎஸ்பிஎன்', "டுப்லி' ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பொழுதுபோக்கு செயலிகளில் "லாப்ஸ்கேப்', "மூன்பீம்', "மூன்லி' ஆகியவை உள்ளன. 

அதேபோல், விளையாட்டு செயலிகளில் "போக்கிமான் யூனைட்' முதலிடம் பிடித்துள்ளது. போட்டி செயலிகளாக "லீக் ஆப் லெஜன்ட்ஸ் - வைல்ட் ரிஃப்ட்', "மார்வல் ஃபியூட்சர் ரெவல்யூசன்', "ரோக்லாண்ட்', சஸ்பெக்ட்ஸ்: மிஸ்டெரி மான்சன்' ஆகியவையும், சிறந்த விளையாட்டு மாற்றிகளாக "இங்கிட்', "ஜான்கேன்அப்', "நைட்ஸ்ஆப் சான்பிரான்சிஸ்கோ', "ஓவர் போர்ட்' ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. 

சிறந்த விளையாட்டு தேர்வாக "கேட்ஸ் இன் டைம்', "கிராஷ் பாண்டிகூட்: ஆன்தி ரன்', "டிஸ்னி பாப் டவுன்', "ஸ்விட்ச்கிராப்ட்', "டவர்ஸ்' ஆகியவை இடம்பிடித்துள்ளன.

டேப் விளையாட்டு செயலிகளில் "சிக்கன் போலீஸ்', "லீக் ஆப் லெஜன்ட்ஸ்', "மை பிரண்ட் பெட்ரோ', "ஓவர்போர்ட்' ஆகியவை உள்ளன. வரும் 2022-இல் இன்னும் அதிநவீன தொழில்நுட்ப செயலிகள் ஆண்ட்ராய்டை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com