Enable Javscript for better performance
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 276- Dinamani

சுடச்சுட

  

  வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 276

  By ஆர்.அபிலாஷ்  |   Published on : 12th January 2021 06:00 AM  |   அ+அ அ-   |    |  

  im14


  ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

  மன்னர் வீரபரகேசரி: அது போகட்டும், இப்படிப் பார்க்கிற இடத்தில் எல்லாம் என்னைப் பார்த்து கும்பிடு போடக் கூடாது. Use some discretion.தேர்தல் ஆணைய குறுநில மன்னர் ராஜராஜ கம்பீர சேதிராயன் (தண்டனிட்டு): ஆகட்டும் மன்னா.
  வீரபரகேசரி: என்னதான் ஆனாலும், தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பொருந்திய அமைப்பு. You are an autonomous constitutional authority. மறந்திராதீங்க.

  ராஜராஜ கம்பீர சேதிராயன்: அப்படீன்னா என்ன மன்னா?

  வீரபரகேசரி: அதுவே தெரியலயா? autonomous constitutional authority என்றால் தனித்தியங்கும் சுய உரிமை கொண்ட, அந்த அதிகாரம் அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட அமைப்பு உங்களுடையது. துணிச்சலா இருக்கணும்.

  ராஜராஜ கம்பீர சேதிராயன் உடனே நிமிர்ந்து அமர்கிறார். மீசையை வருடி விடுகிறார்.
  வீரபரகேசரி: அதுக்குன்னு எம் முன்னாடி துணிச்சலைக் காட்டக் கூடாது. வெளியே.
  ராஜராஜ கம்பீர சேதிராயன் உடனே கைகட்டி தலை குனிகிறார்.
  வீரபரகேசரி: நீ வெளியே சதா நாங்க தன்னாட்சி பொருந்தியவங்க... அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவங்கன்னு அறிக்கை விட்டுக்கிட்டே இருக்கணும். ஆனா இங்கே நீ என் காலுக்குக் கீழே தான்.
  ராஜராஜ கம்பீர சேதிராயன்: நான் என்றும் உங்கள் அடிமை மன்னா.
  கணேஷ்: அதென்ன discretion? எதாவது பாடி லோஷனா?
  ஜூலி: Discretion என்றால் எந்த இடத்தில் எதை எப்படிப் பேச வேண்டும் எனத் தெரிந்து இங்கிதத்துடன் பேசுவது. அதுவும் சிக்கலான நெருக்கடியான கட்டங்களில் பிரச்னை தோன்றாதபடி, சர்ச்சை ஏற்படாதபடி, ரகசியத் தகவல்களை வெளிப்படுத்தாமல் பேசுவது. இது ஓர் அரிய திறன்.
  கணேஷ்: வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல பேசுவதா?
  ஜூலி: அப்படி இல்லை. The quality of behaving or speaking in such a way as to avoid causing offence or revealing confidential information. அப்புறம், இதுக்கு சட்ட மொழியில் இன்னோர் அர்த்தமும் உண்டு. அதாவது ஒரு வழக்கில் ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தை எடுத்துக் கொள்வதா வேண்டாமா என முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு நீதிபதிக்கு உண்டு. அதை discretion எனச் சொல்வார்கள்.
  கணேஷ்: என் நண்பன் ஒருத்தன் இருக்கிறான். நீ தப்பு பண்ணினியாடான்னு கேட்டா, "நான் நல்லதும் செய்யவில்லை, அதனால் நான் கெட்டவன் அல்ல. நான் கெட்டதும் செய்யவில்லை, அதனால் நான் நல்லவனும் அல்லன்னு' சொல்வான். அதுவா?
  ஜூலி: அது பேரு beating around the bush.
  கணேஷ்: சரி ஒருவர் தப்பான நேரத்தில் சரியான விசயத்தை பேசி எல்லாரையும் கடுப்பேற்றினால் அது என்ன?
  ஜூலி: Discretionக்கு எதிர்சொல் - indiscretion. Imprudence. Imprudence உடைய எதிர்ச்சொல் prudence. அதாவது கவனத்துடன், விவேகத்துடன் செயல்படுவது.
  வீரபரகேசரி: யோவ், வரக் கூடிய தேர்தலில் முதன்
  முறையாக நாடு முழுக்க வாக்களிப்பு நடக்கப் போகிறது. அது குறித்த ஏற்பாடுகள் எப்படி போய்க் கொண்டிருக்கின்றன?
  ராஜராஜ கம்பீர சேதிராயன்: மன்னர் மன்னா, எல்லா மக்களும் உங்களுக்கே வாக்களிக்கப் போகிறார்கள்.
  வீரபரகேசரி: எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. மக்கள் படித்து அறிவாளிகளாகிக் கொண்டே போகிறார்கள்.
  ராஜராஜ கம்பீர சேதிராயன்: மன்னா அதற்குத் தான் ஒரு புது ஏற்பாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
  (கையைத் தட்டுகிறார்; உடனே நான்கு பேர் சேர்ந்து ஒரு பெரிய எந்திரத்தை கொண்டு வருகிறார்கள்.)
  வீரபரகேசரி: what kind of a contraption is this?

  கணேஷ்: மன்னர் ஏன் கருத்தடுப்பு பற்றி பேசுகிறார்? அதுக்கும் இந்த எந்திரத்துக்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? ஒரே குழப்பமா இருக்கே.

  ஜூலி: நீ வேற, அது contraception. Conception என்றால் ஒரு பொருள் கருவுறுவது. Contra என்றால் அதற்கு எதிரான, against எனப் பொருள். இரண்டும் சேர்ந்து contraception என இச்சொல் வருகிறது. அதாவது prevention of conception by various drugs, devices or techniques. கருவுறுவதை தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், கருவி, மருந்தை பயன்படுத்துவதே contraception. ஆனால் contraption என்றால் வேறு.
  கணேஷ்: அதான் என்ன?
  ஜூலி: பொறு. வாய் வலிக்குது.

  (இனியும் பேசுவோம்)

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp