இன்ஸ்டாகிராமில் புதிய சேவை!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் "மெட்டா' என்று மாற்றம் கண்டுள்ளது. எனினும், அந்த நிறுவனத்தின் சமூக வலைதளங்களான வாட்ஸ்ஆப்,
இன்ஸ்டாகிராமில் புதிய சேவை!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் "மெட்டா' என்று மாற்றம் கண்டுள்ளது. எனினும், அந்த நிறுவனத்தின் சமூக வலைதளங்களான வாட்ஸ்ஆப்,  இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பெயர்கள் மாறாமல் அப்படியே தொடர்கின்றன.

உலகம் முழுவதும் இனளஞர்களைக் கவர்வதற்காகவே இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. புகைப்படங்களையும், சிறு விடியோக்களையும் எடுத்து சட்டென பல்வேறு குழுக்களுக்குப் பகிரவும் இன்ஸ்டாகிராம் பயன்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் சிறந்த சிறு விடியோக்களுக்கு ரசிகர்களின் பட்டாளம் ஏராளமாக உருவாகும் என்பதால் பலர் இன்ஸ்டாகிராமை பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், நாள் முழுவதையும் அதிலேயே செலவிடுகிறார்கள்.

அப்படி பதிவிடப்படும் விடியோக்களில் இருந்து ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்து ஸ்டிக்கர் போல் வெளியிடும் "ஆட் யுவர்ஸ்' என்ற  புதிய சேவையை இன்ஸ்டாகிராம் தொடங்கி உள்ளது.

இதன் மூலம் ஒருவர் தனது உடை அலங்காரத்தின் சிறு விடியோவை வெளியிட்டு அதன் புகைப்படத்தை ஸ்டிக்கராகப் பிரபலப்படுத்த முடியும்.  மற்றவர்களையும் அதைப்போல் வெளியிடும்படி கூறலாம்.  

ஜப்பான், இந்தோனேசியாவில் சோதனை முறையில் வெளியிடப்பட்ட இந்த புதிய சேவையை உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் தற்போது அறிமுகப்படுத்தி
யுள்ளது. இதன் மூலம் ஒருவர் உருவாக்கும் ஆட் யுவர்ஸ் ஸ்டிக்கர்களைப் போல் பிறரும் பார்த்து அதற்கு ஏற்ப பதிவிட்டதையும் ஒரு சேர பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள இந்த புதிய சேவை   இளைஞர்கள் பலரைக் கவரும்   என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com