வாழ்வில் மாற்றம்... மூன்று படிநிலைகள்!

இந்த கரோனா பேரிடர் இளையதலைமுறையினருக்கு பல்வேறு அனுபவங்களைத் தந்துள்ளது. வாழ்வில் பல இன்னல்களை அது ஏற்படுத்தினாலும், பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் அது அமைந்துவிட்டது. 
வாழ்வில் மாற்றம்... மூன்று படிநிலைகள்!

இந்த கரோனா பேரிடர் இளையதலைமுறையினருக்கு பல்வேறு அனுபவங்களைத் தந்துள்ளது. வாழ்வில் பல இன்னல்களை அது ஏற்படுத்தினாலும், பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் அது அமைந்துவிட்டது.

நம்மில் பலர் சில எதிர்பாராத அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்தால், வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எண்ணுவதுண்டு.

வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளவும் வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்த கரோனா பொதுமுடக்கம் முக்கியபங்காற்றியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லாம். அதாவது ஏற்கெனவே இருந்த வாழ்க்கைமுறையில், வேலையில், தொழிலில் கரோனா பேரிடர் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய வேலைமுறையை, தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பழைய தொழில், வேலையை ஒருவர் மாற்றிக் கொண்டு புதிய வேலையில், தொழிலில் இறங்குவது சிறந்த செயலே. நாம் புதிய தொழில், வேலைமுறைகளைப் பற்றி எப்போதாவது நினைப்போம். அதைப்பற்றிச் சிந்திப்போம். ஆனால் பழைய வேலையில், தொழில் இருந்து விடுபடவோ, புதிய வேலை, தொழிலுக்கான முயற்சிகளில் இறங்கவோமாட்டோம்.

கரோனா பொதுமுடக்கம் பலர் வேலை செய்யும் முறையை, தொழில்களுக்கான வாய்ப்பை மாற்றியமைத்தது. ஆனால் அந்த மாற்றங்கள் முன்னேற்றத்துக்குஉதவியதா? இல்லையா? என்பதுதான் தற்போதைய கேள்வி. உண்மையில் கரோனா பொதுமுடக்க சூழ்நிலையை, வாழ்க்கையில் முன்னேறுவதற்காக- புதிய வேலை, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக -பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

ஏனென்றால், இக்காலகட்டத்தில்ஏற்பட்ட மாற்றங்கள் பலநாள்கள் நீடிக்கும் தன்மை உடையதாக இருந்தன.

எனவே முன்னேற்றத்துக்கான மாற்றங்களை ஏற்படுத்த மூன்று வகைகளில் செயல்படலாம்.

1.பழையனவற்றில் இருந்து விலகியிருத்தல், 2.வரம்பின்றிக் கற்றல், 3.மறுஒருங்கிணைப்பு ஆகியவையே பழைய தொழில், வேலைமுறையை மாற்றும் செயல்திட்டங்களாகும்.

பழையனவற்றில் இருந்துவிலகியிருத்தல்:

பொதுமுடக்க காலகட்டங்களில் நம் அன்றாட நடவடிக்கையில் மாற்றங்கள்ஏற்பட்டுவிட்டன. தொழில் மற்றும் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி விட்டது. இது ஏற்கெனவே இருந்தஅன்றாட வாழ்வின் இயல்பான பழக்க, வழக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்திவிட்டது. இந்த மாற்றங்களைப் புதியவாழ்க்கைமுறையாகவும் கூட நாம் கருதலாம். ஏற்கெனவே இருந்தததில் இருந்து வேறுபட்டதாகவும் கருதலாம். இந்த வேறுபாடு பல மாற்றங்களை நம் வேலை, தொழில்முறையில் ஏற்படுத்தக் கூடும்.

உதாரணமாக பொதுமுடக்கத்தால் பழைய வேலையை இழந்து தவிப்பவர்கள் ஒருபுறம். வீட்டிலிருந்தே கணினி முன் அமர்ந்து அலுவலக வேலைகளைச் செய்
பவர்கள் இன்னொருபுறம். இந்த மாற்றங்கள் நம் பழைய அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை மாற்றி அமைத்துவிட்டன.

அதாவது பழைய வாழ்க்கைச் செயல்பாடுகளில் இருந்து நாம் வேறுபட்டு, புதிய வாழ்க்கைச் செயல்பாடுகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

பொதுமுடக்கச் சூழ்நிலை புதிய செயல்களை செய்யும்படி நம்மைக் கட்டாயப்
படுத்தலாம். ஏற்கெனவே இருந்த வாழ்க்கை முறையை விட, அதிக நேரத்தை பொது முடக்கம் நமக்குத் தந்தது.

ஒவ்வொரும் நேரத்தைத் தனக்காக ஒதுக்கி, தன்னைத் தானே உணர்ந்து கொள்ள உதவியது.

இதுவரையிலான தனது வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளை ஒருவர் தனக்குள்ஒருவர் எழுப்பி பதில் தேடவும் வாய்ப்புத் தந்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பழையனவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். நமது பழைய தொழில், வேலை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த அது
உதவும்.

வரம்பின்றி கற்றல்:

புதிய வேலை, தொழில் வாய்ப்புகளுக்காக அவற்றைப் பற்றி நாம் கற்க வேண்டும். அதற்கான நேரத்தை இந்த பொதுமுடக்கம் நமக்கு அளித்திருக்கிறது. புதியன பலவற்றைக் கற்க, செயல்படுத்த, செயல்பாடுகளிலிருந்து புதியனவற்றைக் கற்க வாய்ப்பைத் தந்துள்ளது. புதிய செயல்களில்பயமின்றி ஈடுபட, அது தொடர்பான தொடர் முயற்சிகளில் ஈடுபட, போதிய நேரத்தையும், மனதளவில் அதிக ஈடுபாட்டையும் இந்த பொது முடக்கம் நமக்கு அளித்திருக்கிறது.

பழைய வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்து, புதிய தொழில், வேலைஆகியவற்றில் ஈடுபட நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இந்தத் தேவையை நிறைவு செய்யும்விதமாக, புதிய வேலை, தொழிலுக்குத் தேவையானவற்றை எல்லையில்லாமல் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மறு ஒருங்கிணைப்பு

பொதுமுடக்கம் முடியும் தருணங்களில் பலர் தெரிவித்த கருத்து, பழைய வாழ்
விற்குத் திரும்ப அவர்களுக்கு விருப்பமில்லை என்பதாகும். கரோனா பேரிடர் ஏற்படுத்திய மாறுபட்ட வாழ்க்கை முறை, இயல்பான வாழ்க்கைமுறையாக மாறிவிட்டதே இதற்குக் காரணமாகும்.

புதிய முயற்சிகள், செயல்பாடுகள் நல்ல வேலை மற்றும் தொழிலுக்கு வழிவகுக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் புதிய வேலை, தொழில் ஆகியவற்றுக்காக நமது சிந்தனை, செயல் மற்றும் முயற்சிகளை மாற்றியமைத்துக் கொண்டு, புதிய வாழ்க்கையை வாழ வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com