இணைய வெளியினிலே...

வானொளி  என்பதுமேக மூட்டத்தையும் சேர்த்தே.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


மாலைக்குள் அத்தனை 
பறவைகளையும் 
கிளைகளில் சேர்த்துவிடுகிறது 
சூரியன். 
என் இரவுக்கென்று
கிளை தவறிய ஒரு பறவைதான்
இந்த நிலா.

 ஆண்டன் பெனி 

வானொளி  என்பது
மேக மூட்டத்தையும் சேர்த்தே.

நேசமிகு ராஜகுமாரன்

உச்சபட்ச தேர்ச்சி பெற்ற வீரனுக்கு,
வில்லும் அம்பும்
தேவையே இல்லை.

 வெள்ளைதுரை


தனித்து முளைத்துவிட்டோம்
என்று விசனப்படாமல்...
மண்ணோடும் வெயிலோடும்
பேசிச் சிரித்து
வளர்ந்துவிடுகிறது பனை.
பிறகு உரையாட
வந்துவிடுகின்றன, கிளிகள்!

ரமேஷ் நாக் கீர்த்தி


சுட்டுரையிலிருந்து...

ஏன் தாடிவளர்க்கிறாய் 
என்றுகேட்கிறார்கள்.
ஒரு வேலையற்ற இளைஞனுக்கு 
வளர்ப்பதற்கும், இழப்பதற்கும் 
வேறு என்ன இருக்கிறது? 
- விக்ரமாதித்யன்

சப்பாணி


புதுசா  கிடைக்குற
வாய்ப்பைப்
பயன்படுத்தணும்...ங்குறதை 
விட  ரொம்ப  முக்கியம்...
இருக்குற  வாய்ப்பை
தவற விடக் கூடாது..ங்குறது.

டீ இன்னும் வரலை  


உலகத்தையே 
மூழ்கடிக்கும் கடலால் 
ஒரு துளி எண்ணெய்யை 
மூழ்கடிக்க முடிவதில்லை...
ஆதலால்
வாழ்க்கையில் யாரையும் குறைவாக 
எடை போடாதீர்கள்.

அசுரன்

என் காலத்திலே நீ 
அரிதாகி விட்டாய்
 என் சந்ததிக்கு நீ 
ஒரு காட்சிப் பொருளாய் மாறி விடக்கூடும்
மன்னித்துவிடு.

இந்திரா

வலைதளத்திலிருந்து...

தற்போதைய பள்ளிக் கல்வி முறையின் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று, குழந்தைகளுக்குக் கண்ணில் எதையும் காண்பிக்காமல் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருப்பதை அப்படியே வகுப்பறையில் கேள்வி பதிலாக மாற்றி, மனனம் செய்ய வைப்பது. பொதுவாக, அறிவியல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான விஷயங்களைக் குழந்தைகளுக்குச் செய்து காட்டிவிடலாம். ஒருசில விஷயங்களைத்தான் செய்துகாட்டுவது கடினம்.

ஓர் அணுவின் உட்கருவைக் காண்பி என்றால் காண்பிக்க முடியாது. ஆனால் ஒரு சாய்தளத்தில் பந்து எப்படி உருண்டுசெல்லும் என்பதையோ, ஒரு தனி ஊசல் எப்படி ஆடும் என்பதையோ, ஒளிக்கதிர்கள் லென்ஸ் வில்லைகளின் ஊடாக எப்படிச் செல்லும் என்பதையோ, ஒரு காந்தத்தின் காந்தப் புலம் எப்படி இருக்கும் என்பதையோ, இன்னும் பலப்பல விஷயங்களையோ மிக எளிதாக வகுப்பறையிலேயே செய்து காட்டிவிடலாம். அவ்வாறு செய்முறையாகச் செய்து காட்டும்போது வகுப்பின் கடைக்கோடி மாணவனுக்கும் என்ன நடக்கிறது என்பது எளிதாகப் புரிந்துவிடும். சொந்தமாக எழுதும் திறன் இருந்தால் அனைத்து மாணவர்களாலும் பார்த்ததை நினைவில் இருத்தி கேள்விக்கான விடைகளை எழுதிவிட முடியும். படங்களை வரைந்து காட்டிவிட முடியும். தேவையான கருவிகள் சில நூறு ரூபாய் அல்லது சில ஆயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடும்.

லென்ஸ் வழியாக ஊடுருவிச் செல்லும் இணை கதிர்கள், சடாரென வளைந்து அதன் குவிமையத்தில் புள்ளியாகக் குவிவதாகப் பாடப் புத்தகத்தில் இருக்கும். அது நிஜமாகவே அப்படி ஆகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம் வெகுகாலமாக இருந்துவந்தது. சென்ற ஆண்டு நானே ஓர் ஒளிக்கதிர்ப் பெட்டியை வாங்கி வீட்டில் செய்துபார்த்தபோதுதான் நிம்மதி ஏற்பட்டது. ஆனால் தினம் தினம் நம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இது இப்படித்தான் என்று சொல்லித் தருகிறார்கள். மாணவர்களும் எந்தச் சலனமும் இன்றி ஏற்றுக்கொள்கிறார்கள். யாருமே, இதனைச் செய்துகாட்டுங்கள் என்று கேட்பதில்லை.

http://thoughtsintamil.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com