நிலச்சரிவு... செவ்வாய் கிரகத்தில்!

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களின் மனதில் தனி இடம் உண்டு. அது ஜாதகம் ஆனாலும் சரி, விஞ்ஞானமானாலும் சரி. இந்தக் கிரகம் பல தசாப்தங்களுக்கு முன்னரே அறிவியல் பூர்வமாக அறிமுகமானதுதான். 
நிலச்சரிவு... செவ்வாய் கிரகத்தில்!


செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களின் மனதில் தனி இடம் உண்டு. அது ஜாதகம் ஆனாலும் சரி, விஞ்ஞானமானாலும் சரி. இந்தக் கிரகம் பல தசாப்தங்களுக்கு முன்னரே அறிவியல் பூர்வமாக அறிமுகமானதுதான். என்றாலும் இன்றும் ஆர்பிட்டர்களும் ரோவர்களும் அக்கிரகத்தில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, சீனா, இந்தியா என விண்வெளியில் வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட விண்வெளியில் பால பாடம் பயின்று கொண்டிருக்கும் நாடுகளும் செவ்வாய் கிரக ஆய்வில் ஆர்வம் காட்டுகின்றன.

செவ்வாய் கிரக மலைகளையும், வளிமண்டலத்தையும், ஏன் புயலைக் கூட புகைப்படங்களாக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், செவ்வாயில் ஏற்பட்ட நிலச்சரிவை? ஆம், அதையும் ஐரோப்பிய விண்வெளி முகமை புகைப்படங்களாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது.

"எக்úஸாமார்ஸ் டிரேஸ் காஸ் ஆர்பிட்டரால்' 2021, ஏப்ரல் 12-ஆம் தேதி இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், செவ்வாய் கிரகத்தின் 35 கி.மீ. பள்ளத்தாக்கு ஒன்றில் 5 கி.மீ. நீளத்துக்கு நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. நிலச்சரிவு என்பது குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் நிகழும்  செயல்முறை ஆகும். பூமியைப் போல செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் ஏற்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட நிலச்சரிவானது சமீபத்திய நிகழ்வு அல்ல என்பது தெரிய வந்தாலும், அது எப்போது ஏற்பட்டது என்பதை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

"டிஜிஓ' எனப்படும் இந்த ரோவர் 2016-இல் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 2018-இல் தனது முழு அறிவியல் பணியைத் தொடங்கியது. இந்த ரோவர் கண்ணைக் கவரும் புகைப்படஙகளை அனுப்புவதுடன், கிரகத்தில் நீர் இருக்கும் இடம் குறித்த வரைபடத்தையும் உருவாக்குகிறது.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் செவ்வாய் கிரக நிலச்சரிவு பதிவு வைரலாகியது. புகைப்படம் வெளியானவுடனேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட "லைக்'குகள் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com