வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஏதாவதொன்றில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வேலை... வேலை... வேலை...


கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

பணி:  மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி 

காலியிடங்கள்: 588
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மைனிங்க் - 253
2. எலக்ட்ரிகல் - 117
3. மெக்கானிக்கல் - 134
4. சிவில் - 57
5. தொழிலகப் பொறியியல் - 15 
6. ஜியாலஜி  - 12 
சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ. 1,80,000

வயது வரம்பு:  04.08.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஏதாவதொன்றில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். ஜியாலஜி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அப்ளைடு ஜியோ பிசிக்ஸ் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும். மருத்துவப் பரிசோதனை தேர்வும் நடத்தப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2021

உயர்நீதிமன்றத்தில் வேலை
 

பணி:  லா கிளார்க்ஸ் 

மொத்த காலிப் பணியிடங்கள்: 37 

தகுதி : 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படித்து சட்டத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது அவசியம். பார் கவுன்சிலில் படிப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ. 30,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.hcmadras.tn.nic.in   என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்த சான்றிதழ்களை இணைத்து மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி: mhclawclerkrec@gmail.com பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras - 600 104.

மேலும் விவரங்கள் அறிய: http://www.hcmadras.tn.nic.in/LAW%20CLERK%20NOTIFICATION%20&%20APPLICATION%20FORM.pdf  என்ற   லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி:13.09.2021 

தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்:  237

பணி:  புராஜெக்ட் சயின்டிஸ்ட்  
பணி:  புராஜெக்ட் சயின்டிபிக்  அசிஸ்டன்ட் 
பணி: புராஜெக்ட்  ஜூனியர்  அசிஸ்டன்ட்  
பணி:எஸ்ஆர்எஃப்
பணி: ஜெஆர்எஃப்
பணி: புராஜெக்ட் டெக்னீசியன்
பணி: ரிசர்ச் அசோசியேட்

தகுதி: மரைன் பயாலஜி, மைக்ரோ பயாலஜி, அக்வாகல்ச்சர், ஓசெனோகிராபி, ஓசென் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், வெல்டர், ஃபிட்டர், மெக்கானிக்கல் டிரேடுகளில் ஐடிஐ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.niot.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

மேலும் விவரங்கள் அறிய:
https://www.niot.res.in/documents/admin_advertisement/2021_Project_Recruitment/Project_Recruitment_Advertisement_2021.pdf ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:13.09.2021
 

சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில்  வேலை
 

பணி:  பாரா மெடிக்கல் ஸ்டாப் 

மொத்த காலியிடங்கள்: 2439

பணிகள்: ஸ்டாப் நர்ஸ்,  பார்மாசிஸ்ட்,  லேப் அசிஸ்டன்ட்,  நர்சிங் அசிஸ்டன்ட், ரேடியோகிராபர்,  பிசியோதெரபிஸ்ட்,  பிளட் பேங்க்டெக்னிசியன்,  லேப் டெக்னிசியன்,  இசிஜி டெக்னிசியன்,  டென்டல் டெக்னிசியன்,  எக்ஸ்ரே டெக்னிசியன்,  டிரஸ்ஸர், பிளாஸ்ட்டர்,  டெலி ஆபரேட்டர், எலக்ட்ரிசியன்,   பியூன் 

தகுதி: துணை ராணுவம், ராணுவத்தில் மேற்கண்ட பணிபிரிவுகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 62வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள்  தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CRPF-Composite Hospital, Avadi, Chennai. 

மேலும் விவரங்கள் அறிய: https://crpf.gov.in/rec/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_219_1_878082021.pdf என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.09.2021 முதல் 15.09.2021 வரை

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தில் வேலை 

பணி: மேனேஜர் (பைனான்ஸ்) 
காலியிடங்கள்: 04

தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.   

பணி: மேனேஜர் (லீகல்) 

காலியிடங்கள்: 02
தகுதி: சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,80,500

பணி:  சீனியர் ஆபீசர் (டெக்னிகல்) 

காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஏ அல்லது பி.டெக், ஏஎம்ஐஇ-இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சீனியர் ஆபீசர் (பைனான்ஸ்)  

காலியிடங்கள்: 27
தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ போன்ற ஏதாவதொரு ஒன்றை முடித்திருப்பதுடன் எம்பிஏ முடித்து ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சீனியர் ஆபீசர் (லீகல்)  

காலியிடங்கள்: 09
தகுதி: சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21  வயது முதல்  30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,77,500

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000 + ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 + ஜிஎஸ்டி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tiic.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.tiic.org/wp}content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.09.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com