வாட்ஸ்ஆப் குரல் பதிவு சேவையில் புதிய அம்சங்கள்!

தகவல் பரிமாற்றத்தில் உலகளவில் வாட்ஸ்ஆப் முதலிடத்தில் உள்ளது. இணைய வசதி இருந்தால் போதும் நொடிப் பொழுதில் உலகின் மூலை முடுக்குக்கும் தகவலைப் பரப்பி விடலாம்.
வாட்ஸ்ஆப் குரல் பதிவு சேவையில் புதிய அம்சங்கள்!


தகவல் பரிமாற்றத்தில் உலகளவில் வாட்ஸ்ஆப் முதலிடத்தில் உள்ளது. இணைய வசதி இருந்தால் போதும் நொடிப் பொழுதில் உலகின் மூலை முடுக்குக்கும் தகவலைப் பரப்பி விடலாம்.

அப்படிபட்ட வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றத்தை முதியவர்கள் முதல் கல்வி
யறிவு இல்லாதவர்களும் கையாள்வதற்கு வாய்ஸ் மெசேஜ் (குரல் பதிவு சேவை) பெரிதும் உதவி செய்கிறது.

2013-இல் தொடங்கப்பட்ட இந்த வாய்ஸ் மெசேஜ் சேவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயன்படுத்த வைத்துள்ளது.

நாள்தோறும் சுமார் 7 பில்லியன் வாய்ஸ் மெசேஜ்கள்  வாட்ஸ்ஆப்பில் 
பகிரப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது வாய்ஸ் மெசேஜ் சேவையில் 6 புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. 

பயனாளர்கள் தங்கள் வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும்போது தேவைப்பட்டால் இடையில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே இடத்தில் இருந்து தொடர முடியும். இடையூறுகளைத் தவிர்க்க இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், வாய்ஸ் மெசேஜை கேட்டுக் கொண்டிருக்கும்போது நிறுத்திவிட்டு மீண்டும் வந்தால் எந்த இடத்தில் நின்றதோ அந்த இடத்தில் இருந்து தொடரும்.
வாட்ஸ்ஆப் சாட்டில் இருந்து வெளியேறிய பின்பும் வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும். 

வேறு செயலிகளின் பயன்பாட்டின்போதும் வாய்ஸ் மெசேஜை தொடர்ந்து கேட்கலாம். 

வாய்ஸ் மெசேஜ் தொடர்பான சிறு எச்சரிக்கை தகவல் (நோட்டிபிகேஷன்) வந்தால் அங்கிருந்தவாறே வாய்ஸ் மெசேஜை பிளே செய்ய முடியும். 
1.5 எக்ஸ் மற்றும் 2 எக்ஸ் வேகத்தில் வாய்ஸ் மெசேஜை வேகமாக இயக்கி கேட்கலாம். 

மேலும், பதிவு செய்யப்பட்ட வாய்ஸ் மெசேஜை ஒலி வடிவிலான அலைவரிசையில் கேட்டுவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு அனுப்பலாம். 

வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய சேவைகள் வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டாளர்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com