வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 326

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 326

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும் அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. அவர்களை விசாரிக்கும் மன்னர் வீரபரகேசரி அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவெடுக்கிறார்.

வீரபரகேசரி: நீ செய்த குற்றத்தை ஒத்துக்கிறியா? You have been caught red-handed. நீ செய்த குற்றத்துக்கான காணொலி ஆதாரங்கள் கிடைத்து விட்டன.

மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: ஐயோ மன்னா... அவை doctored videos என்று சொல்லி மறுக்க நான் விரும்புகிறேன்.

வீரபரகேசரி: உன்னோட claim ஐ நான் ஏத்துக்கிட்டா தானே? நீ சொல்ற பொய்களை எல்லாம் பரிசீலித்து, வருசக்கணக்கா வழக்கை நடத்தி, கடைசியில் உன்னை விடுவிக்க நான் என்ன நீதிமன்றமா? இந்த நாட்டில நீதிபதியும்,சக்கரவர்த்தியும், கடவுளும் நான் தான். நான் சொல்றது தான் சட்டம், நீதி, தீர்ப்பு.

(மனிதவளத்துறை அமைச்சரின் மகன் தலையைப்தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கிறான்)

கணேஷ் ஜூலியிடம்: எனக்கு ஒரே குழப்பமா இருக்குது.
ஜூலி: உனக்கு பதில் சொல்ல எனக்கு டைம் இல்ல.
கணேஷ்: ஏன்?
ஜூலி: என் கேர்ள் ஃபிரண்ட் எனக்கு டெக்ஸ்ட் பண்னியிருக்கிறா. நான் உடனே போகணும்.
புரொபஸர்: காதல்னு வந்திட்டா Julie turns into an eager beaver.

கணேஷ்: அப்படீன்னா?
புரொபஸர்: Over-enthusiastic person. எல்லாத்தையும் நானே பண்றேன் என துடிப்பு காட்டும் ஆர்வக் கோளாறான நபர். இல்லாவிட்டால் he is dull as tombs.
கணேஷ்: Tomb என்றால் கல்லறை தானே?
புரொபஸர்: ஆமா. ஒருவர் as dull as a tomb என்றால் கல்லறை எப்படி சலனமற்று செயலற்று இருக்குமோ அவ்வாறு சோம்பலாக ஆர்வமற்று இருக்கிறார் என்று அர்த்தம்.
கணேஷ்: கல்லறை தான் இறந்து போனவரை அடக்கம் பண்ணின இடமாச்சே?
புரொபஸர்: ஆமா... ஒரு மனிதர் உயிர்ப்புடன் இருப்பதே அவர் active ஆக இருக்கும் போதுதான். அவர் inactive ஆகும் போது அவர் dull as a tomb ஆகி விடுகிறார்.
கணேஷ்: அவருடைய ஆவி கல்லறைக்கு வெளியே வந்து ஆட்டம் போட்டால்?
புரொபஸர்: He will be as active as quicksilver then.
கணேஷ்: Quicksilver என்றால்?
புரொபஸர்: It means liquid silver mercury. தமிழில் சொல்வதானால் பாதரசம்.
கணேஷ்: ஓ...
புரொபஸர்: சிலரால் சற்றும் எதிர்பாராத வகையில் ஜோக் அடிக்க, சொற்களை வைத்து விளையாட முடியும். நகைச்சுவை நடிகர் விவேக், பிக்பாஸ் புகழ் ராஜூ ஆகியோருக்கு இத்திறன் உண்டு. They have a quicksilver wit.
கணேஷ்: ரண்ற் என்றால் நகைச்சுவைத் திறனா?
புரொபஸர்: அப்படி மட்டும் சொல்ல முடியாது. The natural aptitude for using words and ideas in a quick and inventive way to create humour. சிலாக்கியமாக, பகடியாகப் பேசுவது, அதுவும் வெகு இயல்பாக உரையாடலில் வரும் விசயங்களை வித்தியாசமாக நோக்குவது, மாற்றுப் பார்வை தரும்படியாக சிரிப்பூட்டுவது, இரட்டுறமொழிதல் அணி எல்லாமே ஜ்ண்ற்க்குள் வரும்.
கணேஷ்: எங்க ஊரில் முன்பு தமாஷாக பேசுபவர்களை "விட் அடிக்காதே' என்று சொல்லுவார்கள். அப்பழக்கம் இப்போது போய் விட்டது.
புரொபஸர்: ஆமா... அது ஆங்கிலத்தில் இருந்து வரிக்கப்பட்டதாகவே இருக்கணும்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com