வாங்க இங்கிலீஷ் பேசலாம் -328

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் -328

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும் அவருடைய மகனும் நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. அவர்களை விசாரிக்கும் மன்னர் வீரபரகேசரி அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவெடுக்கிறார். அப்போது மன்னர் பயன்படுத்துகிற சில சொற்றொடர்கள், சொற்களைப் பற்றி கணேஷ்வினவ புரொபஸர் விளக்குகிறார். குறிப்பாக doctor என்ற சொல்லுக்கு மருத்துவம் செய்கிறவர், போலியாக ஓர் ஆவணத்தை, சான்றை தயாரிப்பது என இருவேறான அர்த்தங்கள் எப்படி ஏற்பட்டன என கணேஷ் கேட்க அதற்கு பதிலளிக்கும் விதமாக புரொபஸர் doctor எனும் சொல்லின் வேர் எங்கிருந்து வருகிறது என விளக்குகிறார். 13 - ஆம் நூற்றாண்டில் அச்சொல்லுக்கு பாதிரி, பூசாரி எனும் பொருள் இருந்தது எனக் கூறும் அவர், அதன் பின்னர் அதன் பொருள் மாறியது எனக் கூறிட, கணேஷ் அதெப்படி அச்சொல்லுக்கு படித்தவர், அறிஞர் எனும் பொருள் வந்திருக்க முடியும் என வினவுகிறான். 

கணேஷ்: சார்... நான் கூட யோசிச்சிருக்கேன். முனைவர் பட்ட ஆய்வு பண்ணினவங்களை ஏன் டாக்டர்னு கூப்பிடறாங்கன்னு.

புரொபஸர்: அடுத்து 14-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இச்சொல் படித்த அறிஞர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இதற்கு A doctor was a holder of the highest degree in a university, one who has passed all the degrees of a faculty and is thereby empowered to teach the subjects included in it  என்று பொருள் ஏற்பட்டது. அப்படித்தான் teacher, instructor, learned man; one skilled in a learned profession என அறியப்படுகிறவரை டாக்டர் என அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. என்னைக் கூட டாக்டர் என்றே அழைக்கிறார்கள். ஆனால் ஜுரத்துக்கு மருத்துவம் பண்ணச் சொன்னால் எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் பெற்றுள்ளது ஆய்விற்காக கிடைத்த முனைவர் பட்டம். அதாவது MBBS பதிலாக doctorate degree. இதன் பின்னால் ஒரு நெடிய வரலாறு உள்ளது. 

கணேஷ்: அதிருக்கட்டும் டாக்டர். ஆனால் பித்தலாட்டத்துக்கும் டாக்டர் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்? 
புரொபஸர்: இப்படிக் கேட்டால் டாக்டர்கள் எல்லாம் என்னை அடிக்க வந்து விடுவார்கள். 
கணேஷ்: இல்ல சார்... நான் அப்படி கேட்கல. போலி ஆவணம் தயாரிப்பது, படத்தை போட்டோஷாப் பண்ணி போலியாக உருமாற்றுவது இதை doctoring என்று சொல்லுகிறார்களே. ஆனால் வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் அப்படி ஒரு பொருள் வர வாய்ப்பில்லையே என்று கேட்டேன். 
புரொபஸர்: ஓ.... அதுவா, doctor என்பதற்கு பதின்மூன்றாம் நூற்றாண்டு முதலே ஒன்றைப் பொருத்தமாக, சரியாகக் காட்டுவது என பொருள் இருந்திருக்கிறது அல்லவா? 
கணேஷ்: ஆமா டாக்டர். 
புரொபஸர்: ஒரு படத்தை தமக்குத் தேவையானபடி, பொருத்தமாக கச்சிதமாக மாற்றிக் காட்டுவதற்கும் அப்பொருள் வருகிறதல்லவா?
கணேஷ்: கரெக்ட்... இப்ப புரிஞ்சிருச்சு. தாம் கொலை செய்ததாக ஊடகங்களில் உலா வரும் காணொலிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை, 
falsified videos என்று அமைச்சரின் மகன் சொல்லுகிறார். அப்படித்தானே? 
புரொபஸர்: ஆமாம்.
கணேஷ்: Claim என்ற சொல்லைப் பயன்படுத்தினார்களே அதன் அர்த்தம் என்ன?
புரொபஸர்: அதாவது மன்னர் மகனிடம் பேசும் போது "உன்னோட claimஐ நான் ஏத்துக்கிட்டா தானே?' என்று சொன்னார். அந்த இடத்தில் ஸ்ரீப்ஹண்ம் என்பதற்கு கோரல் என்று பொருள். 
கணேஷ்: அப்படீன்னா?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com