இணைய வெளியினிலே...

நதியின் மீது பயணிக்கும் மழைத்துளிதான்...கடல் சேரும்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

நதியின் மீது பயணிக்கும் மழைத்துளிதான்...
கடல் சேரும்.

ஆசு சுப்ரமணியன்


உங்கள் மனதை எப்போதும் பூந்தோட்டமாகவே வைத்துக் கொள்ளுங்கள். 
அப்போதுதான் உங்கள் சொற்கள்,
மணமுடையதாய் இருக்கும்!
கல்குவாரியாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
சொற்கள் கற்களாய்ப் பறக்கும்!

யாழினி முனுசாமி

நாளைய நாள்காட்டி தாளை 
இன்றே  கிழித்து விட்டேன்.
நேற்றைய தாளைக்  
கிழிக்காமல் விட்ட
நிகழ்வும் உண்டு.
இன்றைக்கு என்ன 
கிழித்தோம் என
சரி பார்த்துக் கொண்டால்...
திரும்பவும் நேராது
இந்த தேதிப் பிறழ்வு!

நேசமிகு ராஜகுமாரன்

அவன் கற்றுக் கொள்ள ஒளி கொடுத்து மெழுகுவர்த்திகள்
தங்களைத் தியாகம் செய்தன. 
நாளை... 
அவன் கற்றுணர்ந்ததை போதித்து பலர் வாழ்வில் ஒளியேற்ற!

- தி.ச.நெ. சங்கரநாராயணன்

சுட்டுரையிலிருந்து...


வானம் தன்னை நீரில் பார்த்ததே உலகின் முதல் செல்ஃபி ஆகும்! 

செங்காந்தள்

நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது 
இடங்களைப் பொறுத்து 
அமைவதில்லை! 
நம்மோடு பயணிக்கும் 
மனிதர்களைப் பொறுத்தே 
அமைகிறது! 

லிட்டில் கிருஷ்ணா   

விளக்கிற்கு வெளிச்சம் 
தர மட்டும் தான் தெரியும்.
தேவை எங்கு என்பதை
நாம்தான் தீர்மானிக்க 
வேண்டும்.

கயல்


நான் வளைந்து கொடுக்கிறேன் 
என்பதற்காக
ஒரேடியாக ஒடிக்க முயற்சிக்காதீர்கள்...
நிமிர்ந்தால் சேதாரம் உங்களுக்குத்தான் !

ரயில் கணேசன்

வலைதளத்திலிருந்து...

கி.மு.7700 -ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷையர் மக்கள்தான் முதன் முதலில் நாயை வீட்டில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள உறவு சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். சைபீரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கிடைத்த சுமார் 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாகக் கருதப்படும் நாய்களின் மண்டை ஓடுகளை ஆய்வு செய்து இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.

வீட்டைப் பாதுகாக்கவும், எஜமானர்களுக்கு விசுவாசமாகவும், ஆடுகளை மேய்க்க காவலாளியாகவும், யானைகளை விரட்டவும், பனிப்பகுதிகளில் புதையுண்டு கிடக்கும் மனிதர்களைத் தன்னுடைய மோப்ப சக்தியால்  கண்டுபிடிக்கவும், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களைத் தன்னுடைய மோப்ப சக்தியால் நுகர்ந்து ஆட்களை அடையாளப்படுத்தவும் காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.  மேலும் வெடிகுண்டு, சுரங்கங்களில் மனிதன் இருந்தால் நாய் மூலம் இன்று வரை கண்டுபிடிக்கப் பயன்படுகிறது. 

பண்டையக் காலத்தில் கர்நாடகா போரிலும், பாலிகர் போரிலும் ஆங்கிலேயருக்கு எதிராக ராஜபாளையம் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.  

நாய் வாலாட்டுவதிலும் ஒரு சிறப்பு உள்ளது. வலது புறம் ஆட்டினால் நட்புடன் ஆட்டுகிறது என்றும் இடது புறம் ஆட்டினால் வெறுப்புடன் உள்ளது என்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள். தமிழகத்தில் கடந்த காலங்களில் பாரிவேட்டை என்று சொல்லக்கூடிய போட்டி இருந்தது. அதில் நாய் முக்கிய பங்கு வகித்தது. இன்றும் பன்றிகளைப் பிடிப்பதற்கும், முயல்களைக் கவ்விப்பிடிப்பதற்கும் வேட்டை நாய்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.    

சுனாமி, நிலநடுக்கம் மற்றும் இயற்கை பேரழிவு போன்றவற்றை முன்கூட்டியே மனிதனுக்குத் தெரிவிக்கும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களில் சில ஊளையிட்டால் அது அபசகுனம் என்று  இன்று வரை கிராம மக்கள் நம்புகின்றனர்.  

https://puthu.thinnai.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com