ரயிலும் பேருந்தும் ஒன்றே!

ஒரு இடத்தை சென்றடைய வேண்டுமானால்   சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தியாக வேண்டும்.
ரயிலும் பேருந்தும் ஒன்றே!

ஒரு இடத்தை சென்றடைய வேண்டுமானால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தியாக வேண்டும். நீண்ட தூரத்துக்கு ரயிலையும், குறைவான தூரத்துக்கு சாலையையும் பயன்படுத்துவது இயல்பு.

ஆனால், சாலையில் பேருந்தாகவும், தண்டவாளத்தில் ரயிலாகவும் மாறி இயங்கும்   உலகின் முதல் இரட்டைப் பயன்பாடு வாகனத்தை (டிஎம்வி) ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானின் டோகோஷிமாவில் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. 21 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த டிம்வி வாகனம் சாலையில் பேருந்து போல் இயங்கி மேம்பாலத்தில் ஏறி ரயில் தண்டவாளத்திற்கு சென்ற பிறகு ரயில் தண்டவாளச் சக்கரங்கள் விரிவடைகின்றன.

இந்தச் சக்கரங்கள் பேருந்து சக்கரங்களை மேலே எழுப்பிவிட்டு தண்டவாளத்தில் பொருந்தியதும் ரயிலாக மாறிவிடுகிறது.

ரயில் தண்டவாளத்தில் மணிக்கு 37 கி.மீ. வேகத்தில் சென்று இலக்கை அடைந்ததும், பின்னர் ரயில் சக்கரங்கள் கீழே இறக்கப்பட்டு மீண்டும் பேருந்து சக்கரங்களில் இயக்கப்படுகிறது.

சாலையில் மணிக்கு 62 கி.மீ. வேகத்தில் இந்த டிஎம்வி செல்கிறது. இதில் உள்ள டீசல் என்ஜின் இரட்டைப் பயன்பாடு போக்குவரத்துக்கு பயன்படுகிறது.

குறைவான மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு லாப நோக்கின்றி ரயில், பேருந்து சேவையை அளிக்க இந்த புதிய பொது போக்குவரத்துத் திட்டத்தை தொடங்கியதாக ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் ரயில் தண்டவாளங்களில் இதுபோன்ற இரட்டைப்  பயன்பாட்டு வாகனங்களை இயக்கினால் கிராமங்களிலும் ரயில் மற்றும்  பேருந்து போக்குவரத்து வசதி மேம்படும். கிராமங்களை நோக்கி சுற்றுலா செல்வதும் அதிகரிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com