எடையைக் குறைக்க எளிய வழிகள்

சிலரைப் பொருத்த வரை உடலில் எடை கிடுகிடுவென ஏறிவிடும். பிறகு... ஏறிய எடையை எப்படி குறைப்பது என தெரியாமல் பரிதவிப்பர். சிலர் அதற்காக
எடையைக் குறைக்க எளிய வழிகள்

சிலரைப் பொருத்த வரை உடலில் எடை கிடுகிடுவென ஏறிவிடும். பிறகு... ஏறிய எடையை எப்படி குறைப்பது என தெரியாமல் பரிதவிப்பர். சிலர் அதற்காக டயட்டில் இருக்கிறேன் என்று பட்டினிக் கிடப்பர்.  கர்மகாரியங்கள் செய்பவர்கள்... கயாவில்... மூன்று பிடித்த சாப்பாட்டுப் பொருட்களை விட வேண்டும் என ஒரு பழக்கம் உண்டு. இப்படி பிடித்ததை டாம்பீகமாக விட்டுவிட்டு; பிறகு வாழ்நாள் முழுவதும் அவர்கள் பரிதவிப்பதுண்டு. அதேபேன்று பல தோழிகள்... இதைச் சாப்பிட்டதால்தான்; எடை ஏறியிருக்கும் என; தாங்களேத் தீர்மானம் செய்து சில பிடித்ததைத் தவிர்ப்பர்.  இப்படி, கூடிய எடை குறைய சில யோசனைகள்.

 1. அன்பு காட்டுங்கள்

தோழியிடம் தனிப்பட்ட அக்கறைக்காட்டி பேசுவீர்களோ அதேபோன்று உங்கள் உடம்புடனும் அக்கறையுடன் பேசுங்கள். உடம்பை உருண்டு திரண்டு காட்சியளிக்கச் செய்வதைவிட கனகச்சிதமாய் இருந்தால் இன்னமும் நன்றாக இருக்குமே எனக் கூறுங்கள். உங்கள் உடம்புத் தலையாட்டக் கூடும், காரணம் அதிக எடையையும் கொழுப்பையும் தூக்கும் சிரமம் அதற்குத்தானே தெரியும். ஆக இதனைக் கடைபிடித்துப் பாருங்கள்... இதுவே உடம்பு எடையை யதார்த்தமாக குறைக்க முதல் வழி.

2. கார்போஹைட்ரேட்ஸ்

சாப்பாட்டில் நமக்கு திருப்தி வர வேண்டுமானால் அதில் கார்போஹைட்ரேட்ஸ் ரொம்ப அவசியம். நமது உணவில் பைபர்,  தாவரச் சத்துக்கள், விட்டமின்கள், கனிமப் பொருட்கள் அவசியம் தேவை. இவை உடலுக்கு  நல்லது. காய்கறிகளான உருளை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சோளம், பட்டாணி, பீன்ஸ் மற்றும் அவரை ஆகியவற்றில் நிறைய உண்டு. ஆக இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டாலே, சாப்பாட்டில் நமக்கு திருப்தி வந்துவிடும்.

3. திருப்தி

சாப்பிடும் சாப்பாட்டில் திருப்தி ஏற்பட பிடித்ததை ரசித்து ருசித்து சாப்பிடுவதில்தான் உள்ளது. அளவோடு சாப்பிட்டுப் பாருங்கள் எடையும் கூடாது.

4. மன எழுச்சி

நீங்கள் சாப்பிடுவது உங்களுக்கேத் தண்டனையாக தோன்றுகிறதா? உதாரணமாக தினமும் இட்லிதான் காலை டிபன் என்றால், அது தண்டனை தானே? அதே போன்று பிற்பகல் சாப்பாட்டில் ஒரே மாதிரியான சாம்பார் என சாப்பிட்டு பாருங்கள்.

போரடிக்கும்; இறங்காது. மாறாக காலை டிபனில் தோசை, உப்புமா, பூரி, பொங்கல் என மாற்றி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். சாப்பிட்ட நம் மனதில் ஓர் எழுச்சி ஏற்படும் அதன்மூலம் மனதில் மகிழ்ச்சியும் ஏற்படும். எளிதில் ஜீரணமும் ஆகும்.  ஜீரணமாகாத உணவுதான் எடையைக் கூட்டும். 

பிற்பகல் சாப்பாட்டிலும் சாம்பாருக்கு பதில், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, பொரிச்சக் குழம்பு என மாற்றி மாற்றி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். சாப்பிட்ட மகிழ்ச்சியில்  எளிதில் ஜீரணமும் ஆகும். எடையும் கூடாது. முதலில் எடை கூடாததே ஒரு  வெற்றிதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com