'ஹைப்பர் ஆக்டிவ்' குழந்தைகளா...  கவலை வேண்டாம்!

குழந்தைகள் என்றாலே சுறுசுறுப்புதான். துறுதுறுவென்று அங்குமிங்கும் ஓடி விளையாடுவா ர்கள். நமக்கும் அப்படிப்பட்ட குழந்தைகளைத்தான் ரொம்பவே பிடிக்கும்.

குழந்தைகள் என்றாலே சுறுசுறுப்புதான். துறுதுறுவென்று அங்குமிங்கும் ஓடி விளையாடுவா ர்கள். நமக்கும் அப்படிப்பட்ட குழந்தைகளைத்தான் ரொம்பவே பிடிக்கும். அதுவே குறும்பான குழந்தைகளாக இருந்தால் பெற்றோரால் சமாளிக்கவே முடியாது. அதையும் தாண்டி ஓரிடத்திலும் உட்காராமல் துறுதுறுவென்று ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமில்லை!

"ஹைப்பர் ஆக்டிவ்' குழந்தைகளை கையாளும் விதம் குறித்து ஆலோசனை சொல்கிறார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்:

சாதாரணமாக குறும்புகள் செய்யும் குழந்தைகளை "ஹைப்பர் ஆக்டிவ்' குழந்தைகள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் ஓவர் ஆக்டிவ் குழந்தைகள்.

ஆனால் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக மூளையில் முன்பக்கத்தில் ஃப்ராண்டல் லோப் என்ற ஒரு லோப் இருக்கிறது. இந்த லோப் பிறக்கும்போதே மற்ற குழந்தைகளுக்கு இருப்பது போல் இவர்களுக்கு இல்லாமல் போவதால், எது முக்கியம் எது முக்கியமில்லை என்று பிரித்துப் பார்க்கக் கூடிய திறமை இந்த குழந்தைகளுக்கு இல்லாமல் போகிறது. அதனால் கவனச்சிதைவும் உண்டாகிறது. இந்த கவனக்குறைவினால்தான் ஹைப்பர் ஆக்டிவ் நிலைக்கு ஆளாகிறார்கள். இது நோய் அல்ல; குறைபாடே.

ஹைப்பர் ஆக்டிவ் என்பது, அஈஏஈ குறைபாடு என்பார்கள். அற்ற்ங்ய்ற்ண்ர்ய் ஈங்ச்ண்ஸ்ரீண்ற் ஏஹ்ல்ங்ழ் ஹஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ்:  இதில் முக்கியமாக மூன்று அறிகுறிகள் இருக்கின்றன. முதல் அறிகுறி எந்த வேலையை எடுத்துக் கொள்கிறார்களோ அதைக் கவனித்து முழுமையாக செய்து முடிக்க முடியாத நிலை. இதை கவனச்சிதைவு எனலாம். இரண்டாவது இந்த கவனச்சிதைவு காரணமாக அதிக ஹைப்பராக அதாவது தேவைக்கும் மேலான சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். மூன்றாவது அறிகுறி இம்பல்சீவ், அதாவது என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைச் செய்து விடுவது. உதாரணத்திற்கு ஒரு வீட்டுக்கு போகிறார்கள், அங்கிருக்கும் பொம்மையை பார்க்கிறார்கள், அது இன்னொருவருடையது என்று தெரிந்திருந்தாலும் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், அந்த பொம்மையை எடுத்து பிய்த்துவிடுவர்.

இவர்கள் எதையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியாத நிலையில் இருப்பதால் பெற்றோர் இவர்களைத் திட்டுவார்கள். சமயத்தில் அடியும் விழும். ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளை உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்றால் பெற்றோருக்கு "குழந்தை என்ன செய்யுமோ' என்ற கவலை வாட்டும். வீட்டிலும் அவர்களைத் தனியாக விட்டுப் போகமுடியாது.

வகுப்பிலும்கூட எதையும் முழுமையாக கவனிக்க மாட்டார்கள். கொஞ்ச நேரம் கூட அவர்களால் ஓரிடத்தில் உட்கார முடியாது. எல்லா பிள்ளைகளும் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது இவர்கள் வேறு ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருப்பார்கள். வெளியில் ஏதோ ஒரு சத்தம் கேட்டால் செய்யும் வேலையில் இருந்த கவனம் சிதறி அதில் போய்விடும். இப்படி அறைகுறையாக செய்யும் வேலைகளால் பெற்றோர், ஆசிரியரிடம் திட்டு வாங்குவது தண்டனை வாங்குவது தொடரும். சரியாக பாடத்தை கவனிக்காததால் படிப்பிலும் முன்னேற்றம் இருக்காது. பெற்றோர் இந்த குழந்தைகளை ப்ரி கேஜி லெவலில் இருந்தே இரண்டு மூன்று பள்ளிகளில் மாற்றி மாற்றி சேர்த்திருப்பர்.

படிப்பில் இயலாமை, நண்பர்களுடன் ஒத்துப் போகாத நிலை, தன் வயதை ஒத்த நண்பர்களுடன் சேர மாட்டார்கள். அவர்களும் இவர்களது அணுகுமுறையை பார்த்து தங்களோடு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இந்த நிலை, டீன் ஏஜ் துவங்கும் காலத்தில் குறைய ஆரம்பிக்கும். ஆனால் அதன்பிறகு கோபம் அதிகமாக வரத்துவங்கும். கத்துவது, கை நீட்டுவது எல்லாம் அதிகமாகும். மேலும் மனச்சோர்வும் ஏற்படும். மற்றவர்களும் அதிகம் திட்டுவதால் இவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைந்து விடுகிறது.

ஆய்வின்படி, தற்போது இந்த குறைபாடு மரபியல் சார்ந்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. மேலும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே ஹைப்பர் ஆக்டிவ் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குழந்தைகளை இப்பிரச்னையிலிருந்து மீட்டு வருவது குழந்தையின் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கைகளில்தான் இருக்கிறது.

முதலில் மற்றவர்கள் இவர்களை திட்டுவதை நிறுத்த வேண்டும். இவர்களை இதிலிருந்து மாற்ற ""உன்னை பிடிக்கலை'' என்று சொல்லாமல், ""நீ பண்றது பிடிக்கலை'' ன்னு சொல்லலாம். இதை "க்ரிட்டிசிஸம் சாண்ட்விச்' என்பர்.

அதேபோல் சீக்ரட் சிக்னல் காண்பிக்கணும். அதாவது ""நான் இப்படி சிக்னல் கொடுக்கும்போது நீ அதைச் செய்யக் கூடாது, நிறுத்திடணும்'' என்று யாருக்கும் தெரியாமல் சிக்னல் கொடுக்கணும். இதை குழந்தை உடனே கடைபிடிக்கும்.

மேலும் சுயமதிப்பை கூட்டுவதுபோல், ஸ்டார் சிஸ்டம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சார்ட்டை சுவரில் தொங்கவிட்டு அதில் பல வண்ண ஸ்டார்கள் ஒட்டி அவர்களது சுய மதிப்பீட்டை கூட்டலாம். ஒரு வேலையை சொல்லி அதைச் செய்ததும் சார்ட்டில் ஸ்டார் ஒட்டி என்கரேஜ் செய்ய வேண்டும். குழந்தையையே அந்த ஸ்டாரை ஒட்டச் செய்யலாம்.

கவனச்சிதைவைக் கட்டுப்படுத்த, மேலும் சில வழிமுறைகளை கையாளலாம். காகிதக் குப்பைகளைக் குழந்தை தரையில் போட்டுச் சென்றால், ""அதை எடுத்து குப்பைக்கூடையில் போட்டால் சாயங்காலம் டிவி பார்க்க விடுவேன், விளையாட விடுவேன்'' என்று சொல்லலாம். ஏனென்றால் இத்தகைய குழந்தைகளுக்குப் படிப்பதை விட பார்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதிக நேரம் டி.வி. பார்ப்பதை இவர்கள் விரும்புவர். பாடங்களைக் கூட சிடியில் போட்டு படிக்க வைக்கலாம். இதனால் படிப்பில் கவனம் கூடும். இவர்களுக்கு கவனிக்கும் திறன் குறைவாக இருந்தாலும் அறிவுத்திறன் குறைவாக இருக்காது.

கோபத்தைக் குறைக்கவும் சொல்லிக்கொடுப்பது நல்லது. குறிப்பாக கோபம் வரும் போது இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக்கொள்வது, அல்லது அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விடுவது நல்லது என்று சொல்லிக் கொடுக்கலாம்.

உணவில் சர்க்கரை சார்ந்த ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்றவற்றை குறைத்துக் கொடுப்பது ஹைப்பர் ஆக்டிவ் நிலையை கட்டுப்படுத்தும். சிறு வயதில் கவனித்துவிட்டால் எளிதாக அவர்களை அந்த நிலையிலிருந்து சரிபடுத்தி விடலாம். குழந்தைகள் சற்று பெரியவர்கள் ஆகிவிட்டாலும் கவலை வேண்டாம் மேற்

கூறியவற்றை கையாண்டு வெற்றி பெறலாம். மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com