நான்காண்டு இடைவெளிக்கு பின் "ஹிச்கி' என்ற படத்தின் மூலம் இந்தியில் மறுபிரவேசம் செய்துள்ள ராணி முகர்ஜி, இந்த படம் வெளியான பின் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்குமென எதிர்பார்க்கிறாராம். அண்மையில் தனது 40- வது பிறந்தநாளை கொண்டாடிய ராணி முகர்ஜி, "என்னை 40 வயது நடிகையாக பார்க்காமல் 20 வயது நடிகையாக பாருங்கள். நிறைய படங்களில் நடிக்க கூடிய திறமையும், சக்தியும் எனக்கிருக்கிறது'' என்று கூறினாராம்.
- அ.குமார்