சமையல்... சமையல்...: வரகரிசி இனிப்புப் பொங்கல்

கருப்பட்டியைச் சுத்தம் செய்து, பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவும். திராட்சை, முந்திரிப் பருப்பு இவைகளை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சமையல்... சமையல்...: வரகரிசி இனிப்புப் பொங்கல்

தேவையானவை: 

வரகு - 500 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
கருப்பட்டி - 500 கிராம்
உலர் திராட்சை - 10
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய் - 4
நெய் - 150 கிராம்

செய்முறை:

கருப்பட்டியைச் சுத்தம் செய்து, பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவும். திராட்சை, முந்திரிப் பருப்பு இவைகளை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வரகு, பாசிப்பருப்பு இவைகளை நன்கு கழுவி எடுத்து, 8 தம்ளர் நீர்விட்டு, நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். வேக வைத்த வரகு, பாசிப்பருப்பு கலவையில் கருப்பட்டிப் பாகையும் கலக்கவும். திராட்சை, முந்திரி இவைகளை அக்கலவையில் போட்டு, நன்றாகக் கிண்டி பரிமாறலாம். 
இனிமையானது மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரும் சுவையான பொங்கல் இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com