"திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாகப் புகார்கள் குவிகின்றன. நான் நடிக்க வந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. இதுவரை எனக்கு அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை. திரைப்படத் துறையில் மட்டுமல்ல, வெளியிடங்களிலும் பாதிக்கப்படும் பெண்கள் துணிந்து புகார் அளிக்க முன் வர வேண்டும்'' என்று கூறும் 36 வயதான சன்னி லியோன், அண்மையில் நிஷா என்ற 21மாத பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளார்.