உணவும் மருந்தும்

குளிர்காலத்தில் தினமும் காலை மாலை இருவேளையும் சுக்குமல்லி டீ அருந்தினால் குளிர்கால நோய்களைத் தவிர்க்கலாம்.
உணவும் மருந்தும்

டிப்ஸ்... டிப்ஸ்..

* குளிர்காலத்தில் தினமும் காலை மாலை இருவேளையும் சுக்குமல்லி டீ அருந்தினால் குளிர்கால நோய்களைத் தவிர்க்கலாம்.

* வாரம் இருமுறை இஞ்சி துவையலை உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகளே வராது.

* கனிந்த பூவன் பழத்தில் சீரகத்தூள் தூவிச் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.

* வாரம் இரண்டு பேயன் வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் உடல் சூடு ஒரே சீராக இருக்கும்; மஞ்சள் காமாலை நோய் வருவதைத் தடுக்கும்

* மாதுளம் பிஞ்சின் மேல் தோலை நீக்கி உள்ளிருக்கும் விதையைச் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் அகலும், வாந்தி நிற்கும், அதிக தாகம் அடங்கும்.

* "சுரைக்காய்க்கு உப்பு இல்லை' என்ற பழமொழி உண்டு. சுரைக்காயை எந்த வகையில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் அது உப்பின் அளவைக் குறைக்கும்.

* தண்ணீரில் சீரகம் போட்டு ஊற வைத்துக் குடித்தால் அதிக கண் எரிச்சல் தீரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com