புராதன உணவுப் பொருளான பச்சைப் பயறு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். பயத்தம் பருப்பை வேக வைத்து உண்பது நோயாளிகளுக்கும் வலுவற்றவர்களுக்கும் நல்லது. பெண்கள் கர்ப்பக் காலத்திலும், தாய்ப்பாலூட்டும் கட்டத்திலும் தொடர்ந்து பச்சைப் பயறைச் சேர்த்துக் கொண்டு வந்தால், தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற முடியும். பயத்த மாவுடன் உளுந்து மாவு சேர்த்து பசை போல் செய்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்னை தீரும். முடி நீண்டு வளரும்.
- நெ.இராமன்