தாட்ஷா நவநீதன் கனடா நாட்டின் புதிய ஜனநாயக கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாட்ஷா கனடாவில் ஸ்கேர்பரோவ் பகுதியில் வசிக்கும் தமிழர்.
தாட்ஷாவிற்கு பதிமூன்று ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளது. அடிமட்டத் தொண்டராக தனது அரசியல் பயணத்தைக் தொடங்கிய தாட்ஷாவின் பங்களிப்பு கட்சித் தலைவர்களைக் கவர, கட்சியின் துணைத் தலைவராக தாட்ஷாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கனடாவில் ஒரு அரசியல் கட்சியின் துணைத் தலைவராக ஒரு தமிழர், அதுவும் தமிழ்ப் பெண் பொறுப்பேற்பது இதுதான் முதல் முறை...!
-ஏ.எ. வல்லபி