பிரியங்கா திருமணத்தில் முக்காடு 75 அடி நீளம்....இருபது லட்சம் முத்துக்கள்..!

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தின் ஹைலைட் பிரதமர் மோடி கலந்து கொண்டது. அடுத்த ஹைலைட் பிரியங்கா அணிந்து வந்த "முக்காடு' எனப்படும் முகத் திரை.
 பிரியங்கா திருமணத்தில் முக்காடு 75 அடி நீளம்....இருபது லட்சம் முத்துக்கள்..!

முக்காடு
 ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தின் ஹைலைட் பிரதமர் மோடி கலந்து கொண்டது. அடுத்த ஹைலைட் பிரியங்கா அணிந்து வந்த "முக்காடு' எனப்படும் முகத் திரை.
 அந்த முகத் திரையின் நீளம் 75 அடி. பிரமாண்டமான முகத்திரையை தரையில் புரளாமல் தாங்கிப் பிடிக்க ஆறேழு பேர்கள் தேவைப்பட்டனர்.
 ப்ரியங்கா சோப்ரா - பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் சென்ற வாரம் ஜோத்பூரில் உமைத் அரண்மனையில் நடந்தது.
 அந்த திருமணத்தில் பிரியங்கா அணிந்திருந்த முகத் திரை பலரையும் அதிசயிக்க வைத்தது. அந்த வெண்ணிற உடையினை, அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான "ரால்ப் லாரன்' வடிவமைத்துள்ளது. இருபது லட்சத்திற்கும் அதிகமான முத்துக்கள் வைத்து இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. "அரண்மனையில் நடந்த திருமணத்திற்குப் பொருந்துவதுபோல் பிரியங்காவின் உடை அமைந்திருந்தது' என்று திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் பிரியங்காவைப் பாராட்டத் தவறவில்லை.
 - சேரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com