மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இந்தியில் வெளியான "பிங்க்' படத்தை தமிழில் "நேர் கொண்ட பார்வை' என்ற பெயரில் தயாரித்து வருகிறார். இதில் அஜித், வித்யாபாலன், சிராத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க கல்கி கோச்லின் ஒப்பந்தமாகியுள்ளார். புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழை சரளமாக பேசும் கல்கி கோச்லின், இப்படத்தின் நடன காட்சிக்கான பாடலை மலேசிய ராப் பாடகர் யுனோஹூவுடன் சேர்ந்து பாடியுள்ளார். ஏற்கெனவே இவர் அண்மையில் வெளியான "கல்லிபாய்' என்ற படத்திலும் இசையமைப்பாளராக நடித்துள்ளார்.