மித்தாலியாக டாப்ஸி!

"ஆடுகளம்' புகழ் டாப்ஸி பன்னு ஹிந்தியில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு நடித்து வருபவர்.
மித்தாலியாக டாப்ஸி!

"ஆடுகளம்' புகழ் டாப்ஸி பன்னு ஹிந்தியில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு நடித்து வருபவர். எல்லா வேடங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு நடிக்காமல் எந்த வேடம் தனக்குப் பொருத்தமாக இருக்குமோ அந்த வேடங்களில் மட்டும் நடித்து வருபவர். அதனால் டாப்ஸி படங்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். ஆனால் டாப்ஸி நடித்திருக்கும் படங்கள் அனைத்துமே பாராட்டுகளைப் பெற்றவை. டாப்ஸி கிரிக்கெட் வீரர் சந்தீப் சிங் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் "ஸþர்மா' படத்தில் நடித்து முடிக்கவும், இன்னொரு பட வாய்ப்பு அவர் கதவைத் தட்டுவதற்கும் சரியாக இருந்தது. இந்தப் படமும் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படுவதுதான் இன்னொரு பொருத்தம்.
 இந்திய பெண் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சாதனை கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹிந்தியில் தயாராகும் படத்தில் மித்தாலியாக நடிப்பவர் டாப்ஸி பன்னு.
 சென்ற வாரம்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் மித்தாலியின் அனுபவம் இருபது ஆண்டுகளாக நிறைவடைந்திருக்கிறது. டாப்ஸி படத்தில் மித்தாலியாக நடிக்கத் தொடங்குமுன் முறையாக கிரிக்கெட் ஆடப் பழகுவாராம் ..! சென்ற ஆண்டு தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, இயக்குநர், நடிகை குறித்து முடிவு செய்யப்படாததால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.
 - பனுஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com