உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை!

அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும்.
உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை!

✦    அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும்.
✦    உணவு உண்பதற்கு முன்னர் கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
✦    பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் உணவை உண்ணக் கூடாது.
✦    இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.
✦    காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
✦    வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்தும் உண்ணக் கூடாது.
✦    சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
✦    தொலைக்காட்சியைப் பார்த்தபடியும் உணவினை சாப்பிடக்கூடாது.
✦    சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
✦    இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
✦     உணவினை நின்று கொண்டு சாப்பிடக் கூடாது மற்றும் அதிக கோபத்துடனும் உணவினை உண்ணக் கூடாது.
✦    சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
- முத்தூஸ், தொண்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com